கார்த்திகை தீபம், சீரியலின் நேற்றைய எபிசோடில், ஜயர் மணமகன் மகேஷை மணமேடைக்கு வர சொல்ல, அவன் காணாமல் போன விஷயம் மாயாவுக்கு தெரிய வருகிறது. மாயா போலீசுக்கு தகவல் கொடுக்க சொன்ன நிலையில், போலீசார் திருமண மண்டபத்துக்கு வருகிறார்கள்.
ராஜராஜன் சாமுண்டீஸ்வரியிடம் கேட்ட வார்த்தை:
கார்த்திக்கின் அண்ணன் அருண், லாயருக்கு போன் செய்து கார்த்திக்கை ஜாமீனில் எடுக்க முயற்சி செய்கிறார். ராஜ ராஜன்... சாமுண்டீஸ்வரியிடம் சென்று, ட்ரைவர் தான் நம்ப வீட்டு மாப்பிள்ளை என சொல்லிவிட்டு , இப்போ நீயே அவனை போலீசார் கைது செய்யும் படி செய்துவிட்டாய் என்பது போல் கேட்க, ராஜாவுக்கு நான் சப்போர்ட் பண்றது தெரிந்தால் ரேவதிக்கு சந்தேகம் வரும். அதனால் தான் அப்படி சொன்னதாகவும் ராஜாவை வெளியே எடுக்க லாயர்களை அனுப்பி இருப்பதாகவும் சொல்கிறாள்.
சாமுண்டீஸ்வரி எடுத்த முடிவு:
பின்னர் சாமுண்டீஸ்வரி மகேஷ் எங்க போனான் என்று தெரியவில்லை. ராஜா மேலயும் இப்போ எந்த தப்பும் இல்லை என்பது உறுதியாகி விட்டது. அதனால் இந்த திருமணம் தடைபடாமல் இருக்க ட்ரைவர் ராஜாவுக்கே ரேவதியை திருமணம் செய்து விடலாம் என்று சொல்ல, சாமுண்டீஸ்வரின் இந்த முடிவை சற்றும் எதிர்பாராத ரேவதி அதிர்ச்சி அடைகிறாள்.