ஓ மஹசீயா! தமிழ் பாடல்களுக்கு பூஸ்ட் ஏத்த பயன்படுத்தப்பட்ட ஜிப்ரிஷ் வரிகள் ஒரு பார்வை

First Published | Oct 12, 2024, 12:53 PM IST

Gibberish  Songs : ஜிப்ரிஷ் மொழியை பயன்படுத்தி தமிழ் சினிமாவில் வெளிவந்த சூப்பர் டூப்பர் ஹிட் பாடல்கள் பற்றி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

Tamil songs using Gibberish language

பாடல்களில் கவித்துவம் மிக்க வரிகள் இடம்பெறுவது தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது. அதற்கு மாற்றாக வித்தியாசமான மற்றும் கவர்ச்சிகரமான பாடல் வரிகள் இருந்தாலே அப்பாடல் ஹிட் ஆகிவிடுகின்றன. அந்த வரிசையில் தமிழ் சினிமாவில் ஜிப்ரிஷ் வரிகள் சிலவற்றை பயன்படுத்தி பட்டிதொட்டியெங்கும் ஹிட்டான தமிழ் பாடல்கள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Harris Jayaraj

இசையமைப்பாளர் ஹாரிஷ் ஜெயராஜ் இசையில் கடந்த 2003-ம் ஆண்டு வெளிவந்த படம் காக்க காக்க. கெளதம் மேனன் இயக்கிய இப்படத்தில் சூர்யாவும், ஜோதிகாவும் ஜோடியாக ஆடும் ஓ மஹசீயா என்கிற பாடலுக்கு வைப் செய்யாத ஆளே இருக்க முடியாது. இப்பாடலை ரசிகர்கள் மத்தியில் ரீச் ஆக்கியது ஓ மஹசீயா (oh maha zeeya) என்கிற வரிதான். இதை பலரும் இந்தி என நினைத்திருக்க உண்மையில் அது ஜிப்ரிஷ் மொழியாகும்.

இதையும் படியுங்கள்...ராஜா ராஜா தான்யா! திருக்குறள்ல இருந்து ட்யூன் எடுத்து இளையராஜா போட்ட சூப்பர் ஹிட் சாங்!

Latest Videos


Anirudh

நம்முடைய இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானும் முதல்வன் படத்தில் இடம்பெறும் முதல்வனே பாடலில் ஜிப்ரிஷ் வரிகளை பயன்படுத்தி இருந்தார். அதுமட்டுமின்றி இசையமைப்பாளர் அனிருத் தன்னுடைய இசையில் விஜய் நடித்து பிளாக்பஸ்டர் ஹிட் ஆன பீஸ்ட் திரைப்படத்தில் ஜிப்ரிஷ் வார்த்தைகளை பயன்படுத்தி இருப்பார். இப்பாடலில் வரும் மலமபிதா என்கிற வார்த்தை ஜிப்ரிஷ் மொழியில் இருந்து எடுக்கப்பட்டதாம்.

Music Director Yuvan

இதேபோல் இசையமைப்பாளர்கள் யுவன் சங்கர் ராஜா மற்றும் சந்தோஷ் நாராயணன் ஆகியோரும் ஜிப்ரிஷ் மொழியை தங்கள் பாடல்களில் பயன்படுத்தி இருந்தனர். குறிப்பாக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. தான் இசைய்மைத்த யாரடி நீ மோகினி படத்தில் இடம்பெறு ஓ பேபி பாடலில் ஜிப்ரிஷ் வரிகளை பயன்படுத்தி இருப்பார். அதேபோல் சந்தோஷ் நாராயணன் இசையில் வெளிவந்த ஜிகர்தண்டா படத்தில் ஜிகர் என்கிற பாடல் முழுவதுமே ஜிப்ரிஷ் வரிகளில் தான் உருவாக்கப்பட்டது.

vijay antony

இறுதியாக இசையமைப்பாளர்கள் டி இமான் மற்றும் விஜய் ஆண்டனி ஆகியோரும் ஜிப்ரிஷ் மொழியை பரவலாக பயன்படுத்தி இருக்கின்றனர். இசையமைப்பாளர் டி இமான் தான் இசையமைத்த விஸ்வாசம் படத்தில் இடம்பெறு அடிச்சுதூக்கு பாடலுக்கு ஜிப்ரிஷ் வரிகளை பயன்படுத்தி இருந்தார். அதேபோல் நான் அவன் இல்லை படத்தில் இடம்பெறும் மச்சக்கன்னி என்கிற மாஸ் ஹி பாடலில் இடம்பெற்ற கோரஸ் வரிகள் அனைத்தும் ஜிப்ரிஷ் வரிகள் தான். 

இதையும் படியுங்கள்... பாட்டே இல்லாமல் பட்டிதொட்டியெங்கும் ஹிட்டான படங்கள் இத்தனையா?

click me!