ilaiyaraaja
இசைஞானி இளையராஜா என்றாலே புதுமை தான். ஆயிரக்கணக்கான படங்களுக்கு இசையமைத்துள்ள இவர், படத்துக்கு படம் தன்னுடைய இசையை அடுத்தகட்டத்துக்கு கொண்டு சென்றுவிடுவார். இதனால் தான் அவர் இசையமைத்த பாடல்கள் காலம் கடந்தும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பாடல் உருவாவதற்கு பின்னணியில் ஒரு கதை இருக்கும், அப்படி மைக்கேல் மதன காமராஜன் படத்திற்காக திருக்குறளில் இருந்து ட்யூன் எடுத்து இளையராஜா போட்ட பாடல் பற்றி பார்க்கலாம்.
vaali, Ilaiyaraaja
அப்போது அந்த பாடலை எழுத வந்த கவிஞர் வாலி, என்னய்யா ட்யூன் என்று கேட்டதும் ‘டட்டாட டட்டாட டட்டாட டட்டட்ட ட’ என இளையராஜா சொன்னதும், இந்த மாதிரி ட்யூனெல்லாம் கொடுத்தா எப்படி எழுதுறது என வாலி கேட்க, அண்ணன் ஏற்கனவே எழுதுனது தான இது என இளையராஜா கூறியதைக் கேட்டு ஷாக் ஆன வாலி, என்னது ஏற்கனவே எழுதுனதா என வியப்புடன் கேட்க, அதற்கு இளையராஜா, அதான் வள்ளுவர் எழுதிருக்காரேன்னே என சொல்லி இருக்கிறார்.
ilaiyaraaja's per vachalum vaikama ponalum song
என்னய்யா சொல்ற எனக்கு ஒன்னுமே புரியல, என வாலி கேட்டதும், அந்த ட்யூனை திருக்குறளில் இருந்து தான் எடுத்ததாக இளையராஜா கூறியதோடு அந்த குரலையும் சொல்லி இருக்கிறார். ‘துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை’ என்கிற குரலை படிக்கும்போது வந்தது தான் இந்த ட்யூன் ஐடியா என சொன்னதும் மெய்சிலிர்த்து போன வாலி, வள்ளுவருக்கே டஃப் கொடுக்கும் வகையில் எழுதிய பாடல் தான் ‘பேர் வச்சாலும் வைக்காம போனாலும் மல்லிவாசம்’ பாடல். இந்தப் பாடல் மைக்கெல் மதன காமராஜன் படம் ரிலீஸ் ஆன போதே சக்கைப்போடு போட்ட நிலையில், அண்மையில் சந்தானம் நடித்த டிக்கிலோனா படத்துக்காக இதனை ரீமிக்ஸ் செய்து வெளியிட்டார் யுவன். அந்தப்பாட்டும் வைரல் ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... காசு கொடுத்து வாங்குறதுக்கு சமம்; கோவத்தின் உச்சத்தில் தேசிய விருதை மறுத்த வாலி!