Lubber Pandhu OTT Release Date : ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டகத்தி தினேஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் லப்பர் பந்து திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.
சினிமாவை பொறுத்தவரை கண்டெண்ட் நல்லா இருந்தால் எந்த படமாக இருந்தாலும் ஓடி விடும். அப்படி மிகக் கம்மியான பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு இன்று பட்டிதொட்டியெங்கும் பட்டைய கிளப்பி வரும் திரைப்படம் தான் லப்பர் பந்து. இப்படத்தை தமிழரசன் பச்சைமுத்து என்கிற புதுமுக இயக்குனர் இயக்கி இருந்தார். இப்படத்தில் கெத்து கேரக்டரில் அட்டகத்தி தினேஷும், அன்பு கேரக்டரில் ஹரிஷ் கல்யாணும் நடித்திருந்தனர். அவர்களுக்கு ஜோடியாக சுவாசிகா, சஞ்சனா ஆகியோர் நடித்திருந்தனர்.
24
Lubber Pandhu Movie Actors
கிரிக்கெட்டை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்களுக்கு எப்பவுமே மவுசு உண்டு. அந்த வகையில் லப்பர் பந்து திரைப்படமும் கிரிக்கெட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டு மாஸ் வெற்றியை ருசித்துள்ளது. இப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்து இருந்தாலும் இப்படத்தை தூக்கி நிறுத்தியது பழைய பாடல்கள் தான். அதுவும் கெத்து தினேஷுக்கு போடப்பட்ட ‘நீ பொட்டு வச்ச தங்க குடம்’ பாடல் பட்டிதொட்டியெங்கும் பட்டைய கிளப்பி வருகிறது.
ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ் மட்டுமின்றி பால சரவணன், காளி வெங்கட் ஆகியோரும் தங்கள் டைமிங் காமெடியாலும், நடிப்பாலும் கவனம் ஈர்த்துள்ளனர். லப்பர் பந்து திரைப்படம் கம்மியான பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு இருந்தாலும் இப்படத்திற்கு பாக்ஸ் ஆபிஸில் மாஸ் வரவேற்பு கிடைத்துள்ளது. நான்கு வாரங்களை கடந்து திரையரங்குகளில் வெற்றிநடைபோட்டு வரும் லப்பர் பந்து திரைப்படம் ரூ.33 கோடி வசூலையும் வாரிக்குவித்து இருக்கிறது.
44
Lubber Pandhu OTT Release
திரையரங்குகளில் சக்கைப்போடு போட்டு வரும் லப்பர் பந்து திரைப்படம் தற்போது ஓடிடிக்கு தாவி இருக்கிறது. இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி வெளியாகி இருக்கிறது. அதன்படி இந்தியாவில் இப்படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்திலும், வெளிநாடுகளில் இப்படம் சிம்ப்ளி சவுத் ஓடிடி தளத்திலும் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அந்த வகையில் வருகிற அக்டோபர் 18-ந் தேதி லப்பர் பந்து திரைப்படம் இந்த இரண்டு ஓடிடி தளங்களிலும் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.