தமிழ் சினிமாவில் வளர்ச்சிக்கு வித்திட்ட பிரபலங்களில் நடிகர் கமல்ஹாசனுக்கும் முக்கிய பங்கு உண்டு. தமிழ் சினிமாவில் புதுப்புது தொழிநுட்பங்களை அறிமுகப்படுத்தியதோடு மட்டுமின்றி, இந்தியாவே வியந்து பார்க்கும் அளவுக்கு பல்வேறு பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார் கமல்ஹாசன். அவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த விக்ரம், திரைப்படம், தமிழ்நாட்டில் அதிக வசூல் ஈட்டிய படங்கள் பட்டியலில் முதலிடம் பிடித்து அசத்தியது.