சசிகுமார் நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு வெளிவந்த அசுரவதம் படம் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானவர் லலித் குமார். இதையடுத்து விஜய்யின் மாஸ்டர் படத்தை தயாரித்தார். அப்படம் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பின்னர் விஜய் சேதுபதியின் துக்ளக் தர்பார், காத்துவாக்குல ரெண்டு காதல், சீயான் விக்ரம் நடித்த மகான், கோப்ரா போன்ற பெரிய படங்களை தயாரித்தார் லலித்.
24
Leo Movie Producer
மாஸ்டர் படத்தின் போது விஜய்யுடன் ஏற்பட்ட நட்பின் காரணமாக லியோ படத்திற்காக மீண்டும் தளபதி உடன் கூட்டணி அமைத்தார் லலித். லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படத்தை விஜய்யின் கெரியரிலேயே இதுவரை இல்லாத அளவு மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரித்தார் லலித் குமார். சுமார் 300 கோடி பட்ஜெட்டில் உருவான லியோ திரைப்படம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தியேட்டரில் ரிலீஸ் ஆகி வசூலில் சக்கைப்போடு போட்டு வருகிறது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
இந்த நிலையில், லியோ படத்தின் ரிலீஸுக்கு பின்னர் லலித் குமார் அளித்த பேட்டி ஒன்றில் நடிகர் விஜய்யிடம் திட்டுவாங்கிய தருணம் குறித்து பேசி உள்ளார். அவர் கூறியதாவது : மகான் படத்தை ஓடிடியில் வெளியிட்டதற்காக விஜய் சார் என்னை போன் போட்டு திட்டுனாரு. அந்த சமயத்தில் விக்ரம் சாரின் கோப்ரா, மகான் என இரண்டு படங்கள் ரிலீசாகாமல் இருந்தது. அதில் ஏதாவது ஒரு படத்தை ஓடிடியில் வெளியிட வேண்டிய சூழலில் இருந்தேன்.
44
mahaan poster
கோப்ரா ஷூட்டிங் தாமதம் ஆனதால், வேறுவழியின்றி மகானை ஓடிடியில் ரிலீஸ் செய்தேன். கார்த்திக் சுப்புராஜை சமாதானப்படுத்தி தான் இந்த முடிவை எடுத்தேன். விக்ரம் சாரும் ஃபீல் பண்ணாரு. ஓடிடியில் வெளியிட்ட பின்னர் விஜய் சார் போன் பண்ணி இதெல்லாம் தியேட்டர்ல ரிலீஸ் ஆக வேண்டிய படம், ஏன் இப்படி பண்ணுனனு திட்டியபோது தான் அய்யயோ தப்பு பண்ணிட்டமோனு ரொம்ப ஃபீல் பண்ணினேன்” என லலித் குமார் அந்த பேட்டியில் கூறி உள்ளார்.