ஒரு படத்தின் ஹிட் அல்லது ஃப்ளாப் என்பது ஒருவரை மட்டும் சார்ந்தது இல்லை. ஏனெனில் ஒவ்வொரு படத்திலும் நூற்றுக்கணக்கான குழுவினர் வேலை செய்கிறார்கள், அவர்கள் அனைவரும் படத்தின் வெற்றிக்கு பங்களிக்கிறார்கள். ஆனால் நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் ஒவ்வொரு படத்தின் முகமாக இருப்பதால், அதன் வெற்றி மற்றும் தோல்வியின் பொறுப்பு அவர்கள் மீது விழுகிறது. எனவே, பல வெற்றிகளைப் பெற்ற நடிகர்கள் சூப்பர்ஸ்டார்களாக மாறுகிறார்கள். ஆனால் அதே நேரம் பெரிய தோல்விகளை கொடுக்கும் நடிகர்கள் இருக்கும் இடம் தெரியாமல் காணாமல் போய்விடுகின்றனர்.
210
அந்த வகையில் இந்திய சினிமா வரலாற்றில் மிகப்பெரிய தோல்விப் படங்களின் ஒரு பகுதியாக இருந்த நடிகர் ஒருவர் இருக்கிறார். ஆம். நடிகர் பிரபாஸ் தான் அவர். பான் இந்தியா வெற்றி படங்களில் நடித்த அதே பிரபாஸ் தான் தனது கேரியரில் மிகப்பெரிய தோல்விகளை சந்தித்தவர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
பாகுபலியின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு பிரபாஸின் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான சாஹோ படம் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் ஓரளவு தப்பித்தாலும், விமர்சன ரீதியில் பெரும் பின்னடைவை சந்தித்தது. அந்த படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்களே கிடைத்தது. இதை தொடர்ந்து பிரபாஸ் நடிப்பில் வெளியான ராதே ஷ்யாம் மற்றும் ஆதிபுருஷ் ஆகிய படங்கள் மிகப்பெரிய தோல்விப்படங்களாக அமைந்தன.
410
இந்திய சினிமா வரலாற்றில் இரண்டு பெரிய தோல்விப்படங்களாக இருந்த இந்த படங்களால் சுமார் ரூ. 400 கோடி இழப்பு ஏற்பட்டது. இதற்கு முன்பு பிரபாஸின் கெரியரில் ராகவேந்திரா தொடங்கி சாஹோ வரை பல தோல்விகளை சந்தித்தார். மொத்தத்தில், அந்த படங்கள் சுமார் 100 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. அதாவது பிரபாஸின் படங்கள் பாக்ஸ் ஆபிஸில் தயாரிப்பாளர்களுக்கு ரூ 500 கோடிக்கு மேல் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளன.
510
பிரபாஸின் ஹிட் மற்றும் ஃபிளாப் படங்கள் :
பிரபல தெலுங்கு நடிகர் பிரபாஸ் இந்தியாவின் அதிகம் வாங்கும் நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். தனது 20 வருட திரை வாழ்க்கையில், பிரபாஸ் சில படங்களில் மட்டுமே பணிபுரிந்துள்ளார். 2002 இல் வெளியான ஈஸ்வர் என்ற தெலுங்கு படத்தின் மூலம் தனது திரை வாழ்க்கையைத் தொடங்கினார்.
அடுத்த பத்தாண்டுகளில் வர்ஷம், சத்ரபதி, புஜ்ஜிகாடு போன்ற வெற்றிப் படங்களைக் கொடுத்தார், ஆனால் அடவி ராமுடு, சக்கரம், பௌர்ணமி, யோகி, போன்ற தோல்விப் படங்களிலும் நடித்தார். முன்னா, மற்றும் ஏக் நிரஞ்சன். பில்லா, மற்றும் மிஸ்டர் பெர்பெக்ட் போன்ற படங்களின் மீண்டும் வெற்றியை பதிவு செய்தார்.
710
பின்னர், 2015-ல் பாகுபலி 1, பாகுபலி 2 என மிகப்பெரிய வெற்றிப்படங்களில் நடித்ததன் மூலம் பான் இந்தியா நடிகராக மாறினார். பாகுபலி 1, பாகுபலி 2 இரண்டுமே பாக்ஸ் ஆபிஸ் வசூலில் புதிய சாதனை படைத்து இந்தியாவின் அதிக வசூல் செய்த படங்களில் இடம்பிடித்தன.
810
prabhas wants digital rights of salaar instead of salary
பாகுபலி படங்களின் வெற்றியை தொடர்ந்து பிரபாஸ் படங்கள் மீதான எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்தது. ஆனால் பிரபாஸ் தனது திரை வாழ்க்கையில் மோசமான கட்டத்தை சந்தித்தார் என்றே சொல்ல வேண்டும். சாஹோ படம் சராசரி வசூல் பெற்றாலும் மற்றும் ராதே ஷ்யாம் மற்றும் ஆதிபுருஷ் ஆகிய இரண்டும் பெரிய தோல்விப்படங்களாக மாறின..
910
பாக்ஸ் ஆபிஸ் பேரழிவுகளின் வரிசையின் கீழ் பிரபாஸ் தத்தளித்து வருகிறார். ஆனால் இந்த தோல்விகளை வெற்றியாக மாற்றும் முயற்சியில் பிரபாஸ் தீவிரமாக ஈடுப்பட்டுள்ளார். KGF என்ற பிளாக்பஸ்டர் படத்தை இயக்கிய பிரசாந்த் நீல், பிரபாஸை வைத்து சலார் படத்தை இயக்கியுள்ளார். இதனால் இப்படம் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக உள்ளது. இந்த படத்தின் வெற்றி மூலம் பிரபாஸ் மீண்டும் தனக்கென தனி இடத்தை உருவாக்கி கொள்ளலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
1010
சலார் தவிர பிரபாஸிடம் கல்கி 2898 AD படத்திலும் நடித்து வருகிறார். இந்தியாவின் மிக அதிக பட்ஜெட்டில் உருவாகும் இந்த படமும் மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாக உள்ளது. இந்த 2 படங்களின் மூலம் பிரபாஸ் தொடர் தோல்வியில் இருந்து மீண்டு, மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்வாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.