விஜயின் லியோ பட வெற்றி விழா.. அனுமதிகோரி படக்குழு அளித்த கடித்தம் - நிராகரித்த நேரு உள்விளையாட்டு அரங்கம்!

Ansgar R |  
Published : Oct 29, 2023, 10:17 PM IST

Leo Movie Success Meet : தமிழ் திரை உலகின் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் தான் தளபதி. இந்நிலையில் அவருடைய லியோ திரைப்படத்தின் வெற்றி விழா கொண்டாட்டங்கள் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் வருகின்ற நவம்பர் 1ம் தேதி நடைபெறும் என்ற தகவல் வெளியானது.

PREV
13
விஜயின் லியோ பட வெற்றி விழா.. அனுமதிகோரி படக்குழு அளித்த கடித்தம் - நிராகரித்த நேரு உள்விளையாட்டு அரங்கம்!
Leo movie

பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், இரண்டாவது முறையாக தளபதி விஜய் நடித்து வெளியாகி உலக அளவில் பல கோடி ரூபாய் வசூல் செய்து வரும் திரைப்படம் தான் லியோ. இந்த திரைப்படம் ஒரு மாபெரும் வெற்றி திரைப்படமாக மாறி உள்ளது என்றே கூறலாம்.

"என்னை செதுக்கிய திரையுலக சிற்பிகள்".. ஜப்பான் டிரைலர் வெளியீட்டு விழா - நெகிழ்ச்சியோடு நன்றி சொன்ன கார்த்தி!

23
Trisha

இந்நிலையில் இந்த திரைப்படத்தின் வெற்றி விழாவை வருகின்ற நவம்பர் மாதம் 1ம் தேதி புதன்கிழமை சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் தளபதி விஜய் அவர்களுடைய முன்னிலையில் நடத்த படக்குழு முடிவு செய்திருந்தது. இது குறித்து இன்று அனுமதி கடிதம் ஒன்றையும் நேரு உள்விளையாட்டு அரங்க அதிகாரிகளுக்கு அனுப்பியது லியோ திரைப்பட குழு.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

33
Thalapathy vijay Leo Movie

ஆனால் அனுமதியை பொருத்தவரை, சுமார் பத்து நாட்களுக்கு முன்பாக கடிதம் அனுப்பி அதற்கான அனுமதியை பெற வேண்டும் என்பது தான் நேரு உள்விளையாட்டு அரங்கம் வைத்துள்ள விதி. ஆனால் விழா நடப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு தான் பட குழு கடிதத்தை அனுப்பிய நிலையில், இதற்கான அனுமதி கொடுப்பது குறித்து தற்போது நேரு உள் விளையாட்டு அரங்கம் பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.

Rajinikanth: ஏர்போர்ட்டில் மனைவிக்காக ரஜினியிடம் கோரிக்கை வைத்த ரசிகர்! இன்ப அதிர்ச்சி கொடுத்த சூப்பர் ஸ்டார்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories