Vijays Leo crosses 50 crore in Kerala box office report
விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி உள்ள லியோ படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தாலும், பாக்ஸ் ஆபிஸில் பல சாதனைகள் படைத்து வருகிறது. இந்த படம் இதுவரை சுமார் 450 கோடிக்கு வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் லியோ படத்தின் காஃபி ஷாப் சீனை, காயம் 2 என்ற தெலுங்கு படத்தின் காட்சியுடன் ஒப்பிட்டு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
எனவே மற்றொரு படத்தின் சீனை தனது படத்தில் காப்பி அடித்து வைத்ததற்காக லோகேஷ் கனகராஜை பலரும் விமர்சித்து வருகின்றனர். எனினும் லியோ, காயம் 2 ஆகிய படங்களில் இடம்பெற்ற காபி ஷாப் காட்சிகள் ஒரே மாதிரியாக இருந்தாலும், இரண்டு படங்களுமே History of Violence என்ற ஹாலிவுட் படத்தில் இருந்து ஈர்க்கப்பட்டு எடுக்கப்பட்டது தான்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
2010-ல் வெளியான காயம் 2 படம், History of Violence படத்தின் அதிகாரப்பூர்வமற்ற ரீமேக்காக இருக்கும் நிலையில், லியோ படம் அதிகாரப்பூர்வ ரீமேக் ஆகும். லியோ படத்தின் தொடக்கத்தில் History of Violence படத்தில் இருந்து ஈர்க்கப்பட்டு அந்த படத்தை எடுத்ததாக லோகேஷ் குறிப்பிட்டிருப்பார்.
பாசிட்டிவ் விமர்சனங்களுடன் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் சாதனை படைத்து வருகிறது. படம் வெளியான நாட்களிலேயே 400 கோடி வசூல் செய்துள்ளது. இதனால் உலகளவில் அதிக வசூல் தமிழ் படங்களில் ஒன்றாக லியோ மாறி உள்ளது. மேலும் இப்படம் விரைவிலேயே ரூ.500 கோடி வசூலை கடக்கும் எதிர்பார்க்கப்படுகிறது.