சமந்தா முதல் தனுஷ் வரை.. விவாகரத்துக்கு பின் தமிழ் சினிமா பிரபலங்கள் எடுத்த முடிவு..

First Published | Oct 28, 2023, 5:00 PM IST

கோலிவுட் நட்சத்திரங்களின் விவாகரத்துக்கு பிந்தையை வாழ்க்கை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

From Dhanush, samantha, to amala paul, imman Tamil Film Celebrities post divorce journey
Actor

தமிழ் சினிமா எண்ணற்ற நட்சத்திரங்களை உருவாக்கி உள்ளது. சில பிரபலங்கள் தங்கள் நடிப்பு திறமைக்காக சர்வதேச அங்கீகாரத்தை பெற்று வருகின்றனர். இருப்பினும், சில நட்சத்திரங்களின் தனிப்பட்ட வாழ்க்கை எதிர்பாராத திருப்பங்களை ஏற்படுத்தி உள்ளது.  இதன் விளைவாக தங்கள் வாழ்க்கைத் துணைவர்களிடமிருந்து பிரிவது பற்றிய பொது அறிவிப்புகள் வந்தன. விவாகரத்துக்குப் பிறகு, ஒரு சிலர் மறு திருமணம் செய்து புதிய வாழ்க்கையை தொடங்கினாலும், சிலர் தனியாக இருக்க முடிவு செய்துள்ளனர். அந்த வகையில் விவாகரத்து அல்லது பிரிவுக்கு பிறகான சவாலான பயணம் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

Amala Paul

இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் பல படங்களில் நடித்த பிறகு, அமலா பால், அவரை 2014 இல் திருமணம் செய்து கொண்டார். ஆனால் நடிகையின் முதல் திருமணம் நீண்ட காலம் நீடிக்கவில்லை, ஏனெனில் அவர் 2017 இல் விவாகரத்து பெற்றார். 6 ஆண்டுகளுக்கும் மேலாக தனது வாழ்க்கையை தனிமையில் அனுபவித்து, அமலா பால் தற்போது தனது நண்பர் ஜெகத் தேசாய் என்பவரின் லவ் புரோபஸலை ஏற்றுக்கொண்டுள்ளார். அமலா பால் மற்றும் ஜகத் தேசாய் விரைவில் திருமணம் செய்ய உள்ளனர்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D


சமந்தா தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை மணந்தார், மேலும் இந்த ஜோடியின் பிரமாண்டமான திருமணம் 2017 இல் நடந்தது. ஆனால் சமந்தா - நாக சைதன்யாவின் திருமண வாழ்க்கை நீண்ட காலம் நீடிக்கவில்லை, மேலும் 2021 இல் இந்த ஜோடி தங்கள் பிரிவை அறிவித்தனர்.. பின்னர் சமந்தா தனது திரைப்பட வேலைகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். தற்போது மேலும் அவர் தமிழ் மற்றும் தெலுங்கில் தொடர்ந்து படங்களை வழங்கி வருகிறார்.

நடிகர் தனுஷ் 2004 இல் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவை மணந்தார், இந்த தம்பதியருக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். எல்லாம் சுமூகமாக நடப்பதாகத் தோன்றிய நிலையில், தனுஷும் ஐஸ்வர்யாவும் சுதந்திரமான வாழ்க்கையை வாழ முடிவு செய்ததால் பிரிந்ததாக அறிவித்தனர். இந்த செய்தி அவர்களின் ரசிகர்கள் மற்றும் திரை துறையினர் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இருப்பினும், தனுஷும் ஐஸ்வர்யாவும் தங்கள் மகன்களுக்காக நல்ல பெற்றோராகத் தொடர்ந்து வருகிறார்கள். இந்த ஜோடி மீண்டும் சேர்ந்து வாழ உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Jio MAMI Film Festival: கமல்ஹாசன், பா.ரஞ்சித், பிரியங்கா சோப்ரா உள்ளிட்ட பல பிரபலங்களுடன் களைகட்டிய படவிழா!
 

பிரபல தமிழ் நடிகரான விஷ்ணு விஷால் 2010 ஆம் ஆண்டு ரஜினி நட்ராஜை திருமணம் செய்து கொண்டார், இந்த தம்பதிக்கு ஆர்யன் என்ற மகன் உள்ளார். ஆனால் இந்த தம்பதி சில ஆண்டுகளுக்கு முன்பு தங்கள் உறவை முறித்துக் கொள்ள முடிவு செய்தனர், மேலும் நடிகர் தனது முதல் மனைவியை 2018 இல் விவாகரத்து செய்தார். விஷ்ணு விஷால் பின்னர் இந்திய பேட்மிண்டன் வீராங்கனை ஜ்வாலா குட்டாவை காதலித்தார், மேலும் அவர்கள் 2021 இல் திருமணம் செய்து கொண்டனர்.

d imman

தமிழில் மிகவும் பிரபலமான இசையமைப்பாளர்களில் ஒருவராக இருப்பவர் டி. இமான். இவர் 2008ல் மோனிக்கா ரிச்சர்டை முதலில் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். ஆனால் இவர்களின் 13 ஆண்டு திருமண உறவு 2021 இல் முடிவுக்கு வந்தது, மேலும் டி. இமான் கடந்த 2021 மாதம் மோனிக்கா ரிச்சர்டை விவாகரத்து செய்தார். டி. இமான் பின்னர் மறைந்த கோலிவுட் கலை இயக்குனர் உபால்டின் மகள் அமேலியை மே 2022 இல் திருமணம் செய்து கொண்டார், மேலும் அவர் தனது குடும்பத்துடன் மகிழ்ச்சியான வாழ்க்கையை அனுபவித்து வருகிறார்.

Latest Videos

click me!