லெஜண்ட் சரவணனின் 2வது படம்... லீடர் ஆக மாறி ஆக்‌ஷனில் அடிதூள் கிளப்பும் அண்ணாச்சி..!

Published : Feb 04, 2026, 03:18 PM IST

லெஜண்ட் சரவணன் ஹீரோவாக நடித்துள்ள இரண்டாவது படத்தை துரை செந்தில்குமார் இயக்கி உள்ளார். அப்படத்தின் டைட்டில் மற்றும் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. அதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

PREV
14
Legend Saravanan 2nd Movie Leader

தமிழ்நாட்டில் முன்னணி தொழிலதிபராக வலம் வருபவர் லெஜண்ட் சரவணன். இவர் ஒரு டிரெண்ட் செட்டராகவும் திகழ்கிறார். பொதுவாக தொழிலதிபர்கள் தங்கள் கடை விளம்பரங்களில் நடிகர், நடிகைகளை மட்டுமே நடிக்க வைப்பார்கள். ஆனால் சரவணன் சற்று வித்தியாசமாக யோசித்து, தன் கடை விளம்பரங்களில் நடிகைகளுடன் சேர்ந்து தானும் நடித்திருந்தார். அவர் நடித்த விளம்பரங்களுக்கு அமோக வரவேற்பு கிடைத்தது. விளம்பரங்களில் நடித்து வந்த சரவணனுக்கு சினிமாவில் நடிக்கவும் ஆசை வந்தது. அதையும் தன்னுடைய சொந்த செலவிலேயே நிறைவேற்றிக் கொண்டார்.

24
ஹீரோவான லெஜண்ட் சரவணன்

கடந்த 2022-ம் ஆண்டு வெளிவந்த தி லெஜண்ட் திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் சரவணன். அப்படத்திற்கு ஹாரிஷ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார். அப்படத்தை ஜேடி மற்றும் ஜெர்ரி இயக்கி இருந்தனர். அப்படத்தை பான் இந்தியா அளவில் ரிலீஸ் செய்தது மட்டுமின்றி, அதிகாலை 4 மணிக் காட்சியும் திரையிட்டு மாஸ் காட்டினார். ஆனால் அவர் கொடுத்த பில்டப்புக்கு அப்படம் ஒர்த் இல்லாமல் போனது. அப்படம் கடுமையாக ட்ரோல்களிலும் சிக்கியது. லெஜண்ட் சரவணனுக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை என ஏராளமானோர் கேட்டனர். அதையெல்லாம் அவர் பொருட்படுத்திக்கொள்ளவில்லை.

34
லெஜண்டின் 2வது படம்

தன்னுடைய அடுத்த பட வேலைகளில் இறங்கிய சரவணன், முதல் படத்தில் செய்த தவறுகளை எல்லாம் இரண்டாம் படத்தில் திருத்திக் கொள்ள திட்டமிட்டு, இம்முறை சற்று பரிட்சயமான இயக்குநரான துரை செந்தில்குமார் உடன் கூட்டணி அமைத்தார். இவர் எதிர்நீச்சல், காக்கிசட்டை, பட்டாஸ், கருடன் போன்ற படங்களை இயக்கியவர் ஆவார். அவர் லெஜண்ட் சரவணனை வைத்து படம் இயக்குகிறார் என்கிற தகவல் மட்டும் வெளிவந்தது. அப்படம் என்ன கதைக்களத்தில் உருவாகிறது என்று எந்த அப்டேட்டும் வெளியிடாமல் சைலண்டாகவே அப்படத்தை எடுத்து முடித்திருக்கிறார்கள்.

44
லீடர் டீசர்

இந்நிலையில், அப்படத்தின் டைட்டில் மற்றும் டீசரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. அதன்படி இப்படத்திற்கு லீடர் என பெயரிட்டுள்ளனர். மகளை கொல்ல வரும் ரெளடிகளை அடித்து துவம்சம் செய்யும் ஒரு தந்தையின் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் சரவணன். இந்த டீசரை பார்த்த ரசிகர்கள், இது தான் அவரின் ஒரிஜினல் அறிமுகப் படம் என கூறி வருகின்றனர். அந்த அளவுக்கு நடிப்பில் மெருகேறி இருக்கிறார் சரவணன். இப்படத்தில் ஆண்ட்ரியா, ஷியாம், அறந்தாங்கி நிஷா, அம்ரிதா ஐயர், விடிவி கணேஷ், பாயல் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories