கசக்கிப்போடப்படும் லெட்டர்; கடுப்பாகும் கோமதி... ட்விஸ்ட் வைத்த பாண்டியன் - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அப்டேட்

Published : Feb 04, 2026, 01:42 PM IST

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் பாண்டியனுக்காக ஆசை ஆசையாக கோமதி எழுதி வந்த லெட்டரை அவர் கசக்கி தூக்கிப் போட்டிருக்கிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

PREV
14
Pandian Stores 2 Serial Today Episode

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் கோமதி தன் கணவருக்கு ஆசை ஆசையாக எழுதி வந்த லெட்டரை அவரிடம் கொடுக்க, அதை வாங்கிய பாண்டியன், அதில் முட்டையை மடித்து வந்த கஸ்டமரிடம் கொடுத்துவிடுகிறார். இதைப்பார்த்த கோமதி மனமுடைந்துபோகிறார். பின்னர் சோகத்தோடு கடையில் இருந்து கிளம்பி வீட்டுக்கு செல்லும் கோமதி, போகும் வழியில் மீனாவை சந்தித்து நடந்த கதையெல்லாம் சொல்கிறார். அந்த லெட்டரில் உங்க பெயரை எழுதிருக்கீங்களா என மீனா கேட்க, அதற்கு கோமதி, நான் அதில் விஷயத்தை மட்டும் தான் எழுதியிருக்கிறேன் என சொல்கிறார்.

24
லெட்டரை சேஸ் பண்ணும் மீனா, கோமதி

அச்சச்சோ கடையில் இருந்து முட்டை வாங்கிட்டு போன பொம்பள அந்த லெட்டரை எடுத்து படிச்சதுனா, மாமா தான் அந்த பொம்பளைக்கு லெட்டர் எழுதினதா தப்பா நினைச்சிடுவாங்களே, இதனால் பிரச்சனை ஆனாலும் ஆகலாம் என மீனா சொன்னதும், கடையில் முட்டை வாங்கிச் சென்ற பெண்ணை மீனா, கோமதி இருவரும் சேஸ் பண்ணி செல்கிறார்கள். பின்னர் அந்த பெண்ணை கண்டுபிடித்து அவரிடம் இருந்து லெட்டரை வாங்கிவிடுகிறார்கள். அந்த லெட்டரை எடுத்துக் கொண்டு கோமதி மறுபடியும் கடைக்கு வருகிறார். அவருக்கு துணையாக மீனாவையும் அழைத்து வந்திருக்கிறார்.

34
கசக்கிப்போட்ட பாண்டியன்

பின்னர் கடையில் இருக்கும் பாண்டியனிடம் மீனா பேசிப்பார்க்கிறார். ஆனால் பாண்டியன் மீனாவையும் திட்டிவிடுகிறார். அதன்பின்னர் மீனா அவரிடம் பொறுமையாக எடுத்து சொல்லி, இந்த லெட்டரை படிச்சு பாருங்க என கொடுக்கிறார். பாண்டியனும் அந்த லெட்டரை வாங்குகிறார். சரி படிப்பாரு என பார்த்தால், சட்டென அந்த லெட்டரை கசக்கி தூக்கிப் போட்டுவிடுகிறார். அதன்பின்னர் கோபமடைந்த மீனா, கோமதியை அழைத்துக் கொண்டு, வீட்டுக்கு கிளம்பிவிடுகிறார். அவர்கள் சென்ற பின்னர், தான் கசக்கி எறிந்த லெட்டரை மீண்டும் எடுக்கும் பாண்டியன், அதை தன் பையில் வைத்துக் கொள்கிறார்.

44
பீச்சில் ரொமான்ஸ் பண்ணும் கதிர் - ராஜி

மறுபுறம் சென்னைக்கு சென்றுள்ள கதிரும், ராஜியும் கோச்சிங் கிளாஸ் முடிந்ததும், ஜோடியாக பீச்சுக்கு சென்றிருக்கிறார்கள். பீச்சில் ராஜி ஜாலியாக விளையாடுவதை வீடியோவாக எடுத்து வைத்திருக்கிறார் கதிர். பின்னர் அந்த வீடியோவை பார்க்கும் ராஜி, எதுக்கு இதை எடுத்த என கேட்க, அவர் சும்மா தான் எடுத்தேன் என சொல்கிறார். இவன் எதோ பிளானோட தான் இந்த வீடியோவை எடுத்திருக்கான் என ராஜி சந்தேகப்படுகிறார். அதன்பின்னர் இருவரும் பீச்சில் ஜாலியாக உலா வருகிறார்கள். அத்துடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வந்திருக்கிறது.

Read more Photos on
click me!

Recommended Stories