அய்யனார் துணை சீரியலில் சோழன் தன்னிடம் பேசாமல் இருப்பதை கவனித்து வந்த நிலா, என்ன பிரச்சனை என்பதை கேட்டு தெரிந்துகொள்கிறார். இதையடுத்து என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
அய்யனார் துணை சீரியலில் வானதி, பாண்டியன் சொல்ல சொல்ல கேட்காமல் அவருடன் பெங்களூருக்கு காரில் சென்றிருந்த நிலையில், அவர் இரவு ரொம்ப நேரம் ஆகியும் வீட்டுக்கு வராததால் அவரை அவரது பெற்றோரு அண்ணனும் வலைவீசி தேடி வந்தனர். குறிப்பாக பாண்டியனின் வீட்டுக்கு சென்று தங்கள் மகளைப் பற்றி கேட்டு பிரச்சனை செய்திருந்தார்கள். பின்னர் சேரன், பாண்டியனுக்கு போன் போட்டு விசாரித்த போது தான் வானதி அவனுடன் பெங்களூரு சென்றிருப்பது தெரியவந்தது. இதை வானதியின் பெற்றோரிடமும் சொல்லிவிடுகிறார் பாண்டியன். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்காலம்.
25
வானதிக்கு வீட்டில் சிக்கல்
இரவில் பாண்டியன், வானதியை அழைத்து வந்து அவரின் வீட்டின் அருகிலேயே இறக்கிவிடுகிறார். அவரை தரதரவென இழுத்துச் செல்லும் வானதியின் அம்மா, அவரை அடிக்கப் போகிறார். ஏற்கனவே வானதி, காரில் வரும்போதே பயத்துடனே இருந்தார். பாண்டியனிடமும் நான் உன் வீட்டுக்கே வந்திடுறேன் என கெஞ்சினார். ஆனால் பாண்டியன் தான் சொல்ல சொல்ல கேட்காமல் அவரை அவரது வீட்டிலேயே இறக்கிவிட்டார். வானதியின் நிலைமையை புரிந்து கொண்ட பாண்டியன், அவருக்காக வீட்டுக்குள் சென்று அவரது பெற்றோரிடம் பேசச் செல்கிறார்.
35
வானதியை காப்பாற்றிய பாண்டியன்
உள்ளே போனதும் எல்லாரிடமும் மன்னிப்பு கேட்கும் பாண்டியன், தெரியாம அழைச்சிட்டு போனது தப்புதான் என பேசுகிறார். இதனால் அடிவாங்குவதில் இருந்து தப்பித்து இருக்கிறார் வானதி. பின்னர் தன் வீட்டிற்கு செல்லும் பாண்டியனை சேரன் அழைத்து திட்டுகிறார். ஏண்டா இப்படி பண்ணுன என கேட்டு, அவருக்கு புத்திமதி சொல்கிறார். மறுதினம் காலையில் சேரன், சந்தாவுடன் போன் பேசிக் கொண்டே அவரிடம் ரெசிபி கேட்டு மசாலா டீ போடுகிறார். போன் பேசிக்கொண்டே டீ போட்டதால், கவனக் குறைவில் டீ கீழே சிந்திவிட எல்லாரும் சேரனை ரவுண்டுகட்டி கிண்டல் பண்ணுகிறார்கள்.
அப்போது கிச்சனுக்குள் நிலா வருகிறார். அவர் வந்ததும் சோழன் அங்கிருந்து சென்றுவிடுகிறார். இதை நோட் பண்ணிய நிலா, நேராக சோழனிடம் சென்று உங்களுக்கு என்ன தான் பிரச்சனை. இப்போலாம் என்கிட்ட பேசவே மாட்டேங்குறீங்க என கேட்கிறார். அதற்கு சோழன், அதெல்லாம் ஒன்னுமில்லை என சொல்லி மழுப்புகிறார். பின்னர் நிலா அவரிடம் திரும்பி திரும்பி கேட்டதால், தனக்கு ராகவ்வால் தான் பிரச்சனை என உண்மையை சொல்லிவிடுகிறார் சோழன்.
55
ராகவ்வின் காதலுக்கு ஆப்பு
ராகவ் என்னிடம் ஓப்பனாக சொல்கிறார், நீங்க அவர் ஆளுனு. நீங்க பொய் சொல்றீங்க என கூறும் நிலா, ராகவ் அப்படியெல்லாம் சொல்ல மாட்டாரு என கூற, உடனே தன்னுடைய போனை எடுத்து ராகவ் போட்ட ஸ்டேட்டஸை காட்டுகிறார். அதில் ராகவ் உங்களுக்கு கிஃப்ட் கொடுத்த போட்டோவை போட்டு அதில் ஹார்ட் மற்றும் கிஸ் சிம்பள் வைத்திருப்பதை காட்ட, அதன்பின்னர் தான் நிலாவுக்கு உண்மையே தெரியவருகிறது. அவருக்கு அந்த எண்ணம் இருந்தாலும், நான் அப்படியில்லை என நிலா சொல்லியும் சோழன் அவரை நம்ப மறுக்கிறார். அதன்பின்னர் இருவரும் சண்டை போடுகிறார்கள். இதன்பின் என்ன ஆகப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.