லீக்கான குளியலறை வீடியோ... மேனேஜரிடம் கோபத்தில் கொப்பளித்த லெஜண்ட் பட நடிகை ஊர்வசி!

நடிகை ஊர்வசி ரவுத்தேலாவின் பாத்ரூம் வீடியோவைத் தொடர்ந்து, அவர் தனது மேனேஜருடன் பேசிய ஆடியோவும் கசிந்திருப்பது அவருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Legend movie actress Urvashi Rautela ANGRY Over Leaked Bathroom Video sgb

நடிகை ஊர்வசி ரவுத்தேலாவின் பாத்ரூம் வீடியோவைத் தொடர்ந்து, அவர் தனது மேனேஜருடன் பேசிய ஆடியோவும் கசிந்திருப்பது அவருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், நெட்டிசன்கள் அவரேதான் இதையெல்லாம் லீச் செய்திருப்பார் என்று கூறிக்கொண்டு இருக்கிறார்கள்.

Legend movie actress Urvashi Rautela ANGRY Over Leaked Bathroom Video sgb

பாலிவுட்டில் ஊர்வசி ரவுத்தேலாவின் பெயரைச் சொன்னாலே, ஹேட் ஸ்டோரி 4 போன்ற படங்களில் போல்டாக நடித்தது தான் நினைவுக்கு வரும். ஊர்வசி ரவுத்தேலா கவர்ச்சியான கேரக்டர்களில் தைரியமாக நடித்து புகழ்பெற்றவர். பெரும்பாலும் கவர்ச்சி வேடங்களில் நடித்து வரும் இவர் சமீபத்தில் தமிழில் லெஜண்ட் படத்தில் நடித்திருந்தார்.


ஊர்வசி ரவுத்தேலா அடிக்கடி சர்ச்சைகளில் சிக்குவதும் வாடிக்கையாக இருக்கிறது. இந்நிலையில், இப்போது ஊர்வசி ரவுத்தேலாவின் பாத்ரூம் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்தக் குளியலறை வீடியோ வெளியானதை அடுத்து அவர் தனது மேலாளரிடம் போனில் கோபமாகப் பேசியுள்ளார்.

ஊர்வசி மேனஜருடன் பேசும் அந்த ஆடியோவும் லீக் ஆகி அவருக்கு மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதெல்லாம் என்ன, எப்படி இதுல்லாம் வெளியே போகிறது என்று அவர் ஆத்தித்துடன் கேட்கிறார். அதற்கு மேனேஜர் நடந்ததைப் பற்றிப் பேசி பிரயோஜனம் இல்லை, வீடியோவை இன்டர்நெட்டில் இருந்து நீக்க நடவடிக்கை எடுப்போம் என்று ஈசியாகச் சொல்கிறார்.

பாத்ரூம் வீடியோவைத் தொடர்ந்து ஊர்வசியின் போன் கால் ஆடியோவும் கசிந்திருப்பதால் நெட்டிசன்கள் உஷாராகிவிட்டனர்.  அவர்களுக்கு ஊர்வசி வேண்டுமென்றே இந்த வீடியோவையும் ஆடியோவையும் கசிய விட்டிருப்பாரோ என்று சந்தேகம் எழுந்துள்ளது.

ஊர்வசி ரவுத்தேலா தானே பாத்ரூம் வீடியோவை கசியவிட்டு, சீப்பான பப்ளிசிட்டி தேடுகிறார் என ரசிகர்கள் குறைகூற ஆரம்பித்துள்ளனர். பட வாய்ப்புக்காகவும் மீடியா வெளிச்சத்துக்காகவும் இப்படி எல்லாம் கூட செய்வார்களா என்றும் சிலர் நொந்துகொள்கிளார்கள்.

Latest Videos

click me!