இந்தியன் 2 நெகட்டிவ் கமெண்ட்களுக்கு போல்டான பதில் கொடுத்த உலக நாயகன் கமல்ஹாசன்!

Published : Jul 17, 2024, 08:31 PM IST

இந்தியன் 2 படத்திற்கு வந்திருக்கும் எதிர்மறை விமர்சனங்கள் குறித்து கமல்ஹாசன் விளக்கம் அளித்துள்ள வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

PREV
16
இந்தியன் 2 நெகட்டிவ் கமெண்ட்களுக்கு போல்டான பதில் கொடுத்த உலக நாயகன் கமல்ஹாசன்!
Kamal Haasan on Indian 2

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகியுள்ள இந்தியன் 2 திரைப்படம்  பற்றி நிறைய நெகட்டிவ் ரிவ்யூஸ் வந்துகொண்டு இருக்கின்றன. கமல் ரசிகர்களே பழைய இந்தியன் படத்துடன் ஒப்பிடும்போது இந்தப் படம் தங்களை ஏமாற்றிவிட்டது என்று கூறிவருகிறார்கள்.

26
Kamal replies to Indian 2 Reviews

இந்நிலையில், கமல்ஹாசன் இந்தியன் 2 படத்திற்கு வந்திருக்கும் எதிர்மறை விமர்சனங்கள் குறித்து கருத்து தெரிவித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் அதிகமாகப் பரவி வருகிறது.

36
Indian 2 negative reviews

படம் நல்லா இல்லைன்னா, தைரியமாக நல்லா இல்லைன்னு சொல்லிருங்க. இல்லாட்டி தமிழில் நல்ல படங்களே வரமுடியாமல் போயிரும் என்று கமல் தெரிவித்துள்ளார். இந்தக் கருத்தை ஏற்கெனவே அவரது விக்ரம் படம் ரிலீஸ் ஆனபோதே அவர் கூறியிருந்தார்.

46
Kamal Haasan in Indian 2

இதேபோல, இந்தியன் 2 ரிலீஸ் ஆவதற்கு முன்பும் இதேபோலப் பேசியிருந்தார். இப்ப நாம என்னென்ன தப்பு பண்ணியிருக்கோம்னு  உடனே தெரிஞ்சுருது. அந்த விமர்சனத்தை நாம நல்ல விதமாக எடுத்துக்கணும் என்று கூறினார். ஆனால், ஒரு ஆர்ட்டிஸ்ட் எப்போதும் விமர்சகர்கள் என்ன சொல்வார்களோ என்று யோசித்துக்கொண்டே இருக்கவும் கூடாது என்றும் அவர் கூறியிருந்தார்

56
Indian 2 reviews about Kamal Hassan

இந்நிலையில், இந்தியன் 2 படத்தை அடுத்து இந்தியன் 3 எடுக்கப்போவதாக தகவல்கள் பரவி வருகின்றன. ஏற்கெனவே இந்தியன் 2 படத்திற்கே எதிர்பார்த்த வரவேற்பு இல்லாத நிலையில் அடுத்த பாகத்தை எடுப்பது குறித்து சந்தேகம் எழுந்துள்ளது.

66
Kamal Haasan about Indian 3

ஒருவேளை இந்தியன் 3 படம் எடுப்பதாக இருந்தால் ரசிகர்களின் கருத்துகளை ஏற்றுக்கொண்டு அதற்கு ஏற்ப என்னென்ன மாற்றங்கள் செய்தால் நன்றாக இருக்கும் என சினிமா ரசிகர்கள் பேசத் தொடங்கியுள்ளனர். ஆனால், இந்தப் படத்திலேயே நிறைய நஷ்டம் ஏற்படும் என்று தெரிவதால் ரிஸ்க் எடுப்பார்களா என்பதைப் பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.

click me!

Recommended Stories