மறைந்த நடிகர் சேதுராமனை உரித்து வைத்திருக்கும் மகன்..! கியூட் தேவதை போல் இருக்கும் மகள்..! வைரலாகும் போட்டோஸ்!

First Published | Dec 8, 2022, 5:14 PM IST

கடந்த 2020 ஆம் ஆண்டு மாரடைப்பால் இறந்த நடிகரும், மருத்துவருமான, சேதுராமனின் மகன் மற்றும் மகளின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
 

'கண்ணா லட்டு தின்ன ஆசையா' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மருத்துவரும், பிரபல காமெடி நடிகர் சந்தானத்தின் நண்பருமான சேது ராமன்.

இதைத்தொடர்ந்து 'வாலிப ராஜா', 'சக்க போடு போடு ராஜா',  50/50 போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்தார். மேலும் சில படங்களில் கதாநாயகனாக நடிக்க கமிட் ஆகி இருந்தார்.

Tap to resize

அதே போல் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களாக இருக்கும் பலருக்கு தோல் மருத்துவராகவும் சேதுராமன் தான் இருந்தார். இதற்காக ZI கிளினிக் என்கிற மருத்துவமனை ஒன்றையும் நிர்வகித்து வந்தார்.

ஜாக்கெட் போடாமல் சேலை கட்டி... முந்தானையால் முன்னழகை மறைத்த நடிகை ரீமா கல்லிங்கள்! வித்யாசமான போட்டோ ஷூட்!

இந்நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக, கடந்த 2020 ஆம் ஆண்டு ஏற்பட்ட திடீர் மாரடைப்பு காரணமாக சேதுராமன் உயிரிழந்தார். இவருக்கு மனைவி ஒரு மகள், இருந்த நிலையில் இவர் இறக்கும்போது இவருடைய மனைவி நான்கு மாத கர்ப்பமாக இருந்தார்.

சேதுராமன் மறைவிற்குப் பின், அவருடைய மனைவி உமா அழகிய ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். மேலும் கணவரின் நினைவில் இருந்து மெல்ல மெல்ல மீண்டு, கணவரின் மருத்துவமனை போன்றவற்றை நிர்வாகம் செய்து வருகிறார்.

'வாரிசு' படத்தின் தீ தளபதி பாடலுக்கு சிம்பு வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா? வெளியான ஆச்சர்ய தகவல்!

தற்போது அவருடைய மருத்துவமனை உள்ளிட்டவற்றை அவருடைய மனைவி நிர்வகித்து வரும் நிலையில் மறைந்த நடிகர் சேதுராமனின் மகன் மற்றும் மகள் ஆகியோரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது. 

சேதுராமனின் மகன் அப்படியே அவருடைய அப்பாவை உரித்து வைத்தது போல் இருப்பதாகவும், மகள் நன்கு வளர்ந்து அழகு தேவதை போல் க்யூட்டாக இருக்கிறார் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கூட காசு கொடுத்து ஓட்டு வாங்குகிறீர்களா 3 போட்டியாளர்கள்? கிளம்பிய புது சர்ச்சை..!

Latest Videos

click me!