டைட்டில் வின்னருக்கே இந்த நிலைமையா?.... ‘பிக்பாஸ் 5’ பைனலுக்கு அழைக்காமல் புறக்கணிப்பு - ரசிகர்கள் அதிர்ச்சி

Ganesh A   | Asianet News
Published : Jan 16, 2022, 10:45 AM ISTUpdated : Jan 16, 2022, 10:51 AM IST

பிக்பாஸ் 5-வது சீசனில் ராஜு முதலிடத்தையும், பிரியங்கா 2-வது இடத்தையும், பாவனி 3-ம் இடத்தையும், அமீர் மற்றும் நிரூப் ஆகியோர் முறையே 4 மற்றும் 5-வது இடத்தை பிடித்தனர்.

PREV
15
டைட்டில் வின்னருக்கே இந்த நிலைமையா?.... ‘பிக்பாஸ் 5’ பைனலுக்கு அழைக்காமல் புறக்கணிப்பு - ரசிகர்கள் அதிர்ச்சி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கென தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. பரபரப்புக்கும், சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லாத இந்நிகழ்ச்சி இதுவரை 4 சீசன்கள் முடிந்துள்ளது. முதல் சீசனில் ஆரவ், இரண்டாவது சீசனில் ரித்விகா, மூன்றாவது சீசனில் முகின் ராவ், நான்காவது சீசனில் ஆரி ஆகியோர் பிக்பாஸ் டைட்டிலை ஜெயித்தனர்.

25

தற்போது 5-வது சீசன் இறுதிக்கட்டதை எட்டியுள்ளது. 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் 5 நிகழ்ச்சியில் 5 போட்டியாளர்கள் மட்டுமே இறுதிப்போட்டிக்கு சென்றனர். இதில் ராஜு முதலிடத்தையும், பிரியங்கா 2-வது இடத்தையும், பாவனி 3-ம் இடத்தையும், அமீர் மற்றும் நிரூப் ஆகியோர் முறையே 4 மற்றும் 5-வது இடத்தை பிடித்தனர்.

35

பொதுவாக பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி பிரம்மாண்டமாக நடத்தப்படும். இதில் அனைத்து போட்டியாளர்களும் கலந்துகொள்வர், அதேபோல் முந்தைய சீசன் வெற்றியாளரும் சிறப்பு விருந்தினராக அழைக்கப்படுவது வழக்கம். ஆனால் இந்த முறை அவ்வாறு நடக்கவில்லையாம். கடந்த சீசனில் டைட்டில் ஜெயித்த ஆரி, பிக்பாஸ் 5 இறுதிப்போட்டிக்கு அழைக்கப்படவில்லையாம்.

45

இதனை ஆரியே தனது டுவிட்டர் பதிவு மூலம் தெரிவித்துள்ளார். அந்த பதிவில் “டிராபியை கொடுக்கும் நிகழ்வில் நீங்கள் எனக்காக காத்திருப்பீர்கள் என தெரியும். நானும் அதற்காக ஆவலோடு இருந்தேன். ரசிகர்களையும், கமல் சாரையும் சந்திக்க காத்திருந்தேன். ஆனால் எதிர்பாராத விதாம எனக்கு பிக்பாஸ் குழுவினரிடம் இருந்து எந்த அழைப்பும் வரவில்லை” என ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார். 

55

ஆரியின் இந்த பதிவைப் பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த சீசன் டைட்டில் வின்னரையே புறக்கணித்ததற்கான காரணம் என்ன என கேள்வி எழுப்பி வருகின்றனர். இதற்கு பிக்பாஸ் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தகுந்த விளக்கம் அளிப்பார்களா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

click me!

Recommended Stories