காதல் கணவர் தனுஷை விவாகரத்து செய்த பின்னர், தீவிரமாக திரைப்படம் இயக்குவதில் கவனம் செலுத்தி வரும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், நீண்ட இடைவெளிக்கு பின்னர் கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து 'லால் சலாம்' என்கிற திரைப்படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தில் ரஜினிகாந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ள நிலையில், நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் ஹீரோவாக நடிக்கின்றனர்.
இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் துவங்கி உள்ளதாக, இந்த படத்தை தயாரிக்கும் லைகா நிறுவனம் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. மேலும் ரசிகர்களுக்கு ஹோலி வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளது.