இந்த மனசு யாருக்கு வரும்... திடீரென சம்பளத்தை குறைத்த சிவகார்த்திகேயன்..! அதுவும் இத்தனை கோடியா?

Published : Mar 07, 2023, 11:53 AM IST

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க உள்ள படத்திற்காக நடிகர் சிவகார்த்திகேயன் தனது சம்பளத்தை திடீரென குறைத்துக்கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

PREV
14
இந்த மனசு யாருக்கு வரும்... திடீரென சம்பளத்தை குறைத்த சிவகார்த்திகேயன்..! அதுவும் இத்தனை கோடியா?

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த பிரின்ஸ் திரைப்படம் படு தோல்வியை சந்தித்தது. இப்படத்தின் நஷ்டத்தை ஈடு செய்யும் வகையில் நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் தயாரிப்பாளர் இணைந்து விநியோகஸ்தர்களுக்கு ரூ.12 கோடி இழப்பீடு வழங்கிய சம்பவங்களும் அரங்கேறின. பிரின்ஸ் படத்தின் தோல்விக்கு பின் எப்படியாவது வெற்றிப்படம் கொடுக்க வேண்டும் என்கிற கட்டாயத்தில் உள்ளார் சிவகார்த்திகேயன்.

24

அவர் நடிப்பில் தற்போது மாவீரன் திரைப்படம் தயாராகி வருகிறது. மடோன் அஸ்வின் இயக்கும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பும் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. மாவீரனை தொடர்ந்து கமல் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார் சிவகார்த்திகேயன். இப்படத்தில் நடிகை சாய் பல்லவி ஹீரோயினாக நடிக்க கமிட் ஆகி இருக்கிறார். இதுதவிர அயலான் படமும் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

இதையும் படியுங்கள்... அகிலன் முதல் டாடா வரை... இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓடிடியில் ரிலீசாகும் படங்களின் முழு லிஸ்ட் இதோ

34

மேலும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்க உள்ளார் சிவகார்த்திகேயன். மகேஷ் பாபுவின் ஸ்பைடர் படத்தை தயாரித்த தயாரிப்பாளர் தான் ஏ.ஆர்.முருகதாஸ் - சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாகும் படத்தையும் தயாரிக்க உள்ளாராம். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இப்படத்திற்காக நடிகர் சிவகார்த்திகேயன் சம்பளத்தை குறைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

44

அதன்படி முருகதாஸ் இயக்கும் படத்தில் நடிக்க ரூ.5 கோடி வரை சிவகார்த்திகேயன் தனது சம்பளத்தை குறைத்துள்ளாராம். அதுமட்டுமின்றி இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸும் தன் பங்கிற்கு ரூ.5 கோடி சம்பளத்தை குறைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. தங்களது கடைசி படங்கள் சரிவர போகாததால் அவர்கள் இருவரும் இவ்வாறு சம்பளத்தை குறைத்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்களின் செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

இதையும் படியுங்கள்... ஆரம்பிச்சு ஒரு மாசம் தான் ஆகுது அதுக்குள்ளயா...! பாரதி கண்ணம்மா 2 சீரியலில் இருந்து விலகிய நடிகை

Read more Photos on
click me!

Recommended Stories