கிரிக்கெட் வீரர்கள் சினிமாவில் கால்பதிப்பது தொடர்கதை ஆகி வருகிறது. அந்த வகையில் கிரிக்கெட் வீரர்களான ஹர்பஜன் சிங்கும், இர்பான் பதான் தமிழ் சினிமாவில் நடிகர்களாக களமிறங்கி ஆச்சர்யப்படுத்தினர். இதற்கு அடுத்தபடியாக பிரபல நட்சத்திர கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி, சமீபத்தில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியதோடு மட்டுமின்றி, தமிழில் தனது முதல் படத்தையும் தயாரிக்க தொடங்கி உள்ளார்.
இப்படத்தில் யோகிபாபு, நதியா உள்பட ஏராளமான நடிகர், நடிகைகள் நடித்து வருகின்றனர். லெட்ஸ் கெட் மேரிடு திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தோனியின் பார்முலாவை பின்பற்றி பிரபல கிரிக்கெட் வீரர் ஜடேஜாவும் தற்போது தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கி இருக்கிறார். அந்நிறுவனம் தயாரிக்க உள்ள முதல் படத்துக்கான அறிவிப்பும் வெளியாகி உள்ளது.
அதன்படி ஜடேஜா தயாரிக்கும் முதல் படத்திற்கு பச்சாதர் கா சோரா (Pachhattar Ka Chhora) என பெயரிடப்பட்டு உள்ளது. இப்படத்தில் பாலிவுட் நடிகர் ரன்தீப் ஹூடா நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நீனா குப்தா நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். ஜெயந்த் என்பவர் தான் இப்படத்தை இயக்க உள்ளார். இப்படி தோனி மற்றும் ஜடேஜா அடுத்தடுத்து திரையுலகில் தயாரிப்பாளராக களமிறங்கி உள்ளது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படியுங்கள்... அகிலன் முதல் டாடா வரை... இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓடிடியில் ரிலீசாகும் படங்களின் முழு லிஸ்ட் இதோ