ரஜினிகாந்த் நடித்த லால் சலாம் திரைப்படம் நீண்ட இடைவெளிக்கு பின்னர் ஓடிடியில் ரிலீஸ் ஆக உள்ள நிலையில், அதற்கு போட்டியாக என்னென்ன படங்கள் ரிலீஸ் ஆகிறது என்பதை பார்க்கலாம்.
திரையரங்குகளில் வார வாரம் புதுப்படம் ரிலீஸ் ஆவதைப் போல் ஓடிடி தளங்களிலும் திரைப்படங்கள் வரிசைகட்டி ரிலீஸ் ஆன வண்ணம் உள்ளன. ஜூன் மாதம் தற்போது தொடங்கி உள்ள நிலையில், திரையரங்கில் இந்த வாரம் கமல்ஹாசனின் தக் லைஃப் திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. அதேபோல் ஓடிடியில் ஒரு பிரம்மாண்ட படம் ரிலீஸ் ஆக உள்ளது. அதற்கு போட்டியாக என்னென்ன படங்கள் இந்த வாரம் ஓடிடி தளங்களில் ஸ்ட்ரீம் ஆக உள்ளது என்பதை பார்க்கலாம்.
25
லால் சலாம்
ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் கடந்த ஆண்டு திரைக்கு வந்த படம் லால் சலாம். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்து இருந்தது. இதில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மொய்தீன் பாய் என்கிற கேமியோ ரோலில் நடித்திருந்தார். இப்படம் திரையரங்குகளில் வெளியாகி படுதோல்வியை சந்தித்தது. அதன்பின்னர் தான் படத்தின் முக்கிய காட்சிகள் அடங்கிய ஹார்டு டிஸ்க் தொலைந்துவிட்டதாக கூறினார் ஐஸ்வர்யா. அதுவே படத்தின் தோல்விக்கு காரணமாக கூறப்பட்டது
35
கூடுதல் காட்சிகளுடன் வெளியாகும் லால் சலாம்
ஹார்டு டிஸ்க் விவகாரத்தால் அப்படத்தின் ஓடிடி வெளியீடு தடைபட்டது. இதையடுத்து ஹார்டு டிஸ்க் அண்மையில் கிடைத்துவிட்டதாக கூறப்பட்ட நிலையில், அதில் உள்ள காட்சிகளை இணைத்து, தற்போது கூடுதல் காட்சிகளுடன் லால் சலாம் படம் ஓடிடியில் ரிலீஸ் ஆக உள்ளது. அதன்படி வருகிற ஜூன் 6ந் தேதி இப்படம் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
மலையாளத்தில் சூப்பர் நேச்சுரல் திரில்லர் படமாக ரிலீஸ் ஆன வடக்கன் தற்போது தமிழில் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தில் கிஷோர், ஸ்ருதி மேனன் ஆகியோர் நடித்துள்ளனர். சஜீத் இயக்கிய இப்படம் கடந்த மார்ச் மாதம் திரைக்கு வந்து நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி வருகிற ஜூன் 6ந் தேதி இப்படம் ஆஹா ஓடிடி தளத்தில் தமிழில் ஸ்ட்ரீம் ஆக உள்ளது.
55
மற்ற மொழி படங்கள்
Pattth என்கிற மலையாள திரைப்படம் ஜூன் 6ந் தேதி மனோரமா மேக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. அதேபோல் இந்தியில் ChhalKapat : The Deception என்கிற திரைப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் ஜூன் 6ந் தேதி முதல் ஸ்ட்ரீம் ஆக உள்ளது. Dear Daddy என்கிற தெலுங்கு திரைப்படம் வருகிற ஜூன் 8ந் தேதி முதல் ஈடிவி வின் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.