ரேகா நாயர் உன் பிரெண்ட் எங்கம்மா... பயந்துட்டாரா! பயில்வானை பங்கமாக கலாய்த்த லட்சுமி ராமகிருஷ்ணன்

First Published | May 22, 2023, 11:43 AM IST

பிரியமுடன் பிரியா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன், பயில்வான் ரங்கநாதனை கிண்டலடித்து பேசி உள்ளார்.

தமிழ் படங்களில் வில்லன் மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் பயில்வான் ரங்கநாதன். சினிமா பத்திரிகையாளரான இவர், சமீப காலமாக யூடியூபில் முன்னணி நடிகர், நடிகைகள் பற்றி பல்வேறு அந்தரங்க தகவல்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். ஒருமுறை நடிகை ராதிகா பற்றி இழிவாக பேசி பயில்வான் ரங்கநாதனை திருவான்மியூர் கடற்கரையில் வைத்து, ராதிகா அறைந்த சம்பவமும் அரங்கேறியது.

இச்சம்பவத்துக்கு பின்னர் தன்னுடைய சர்ச்சை பேச்சை தொடர்ந்து வரும் பயில்வான், இரவின் நிழல் படத்தில் ரேகா நாயர் நிர்வாணமாக நடித்திருந்ததை பற்றி விமர்சித்து இருந்தார். இதைப் பார்த்து கடுப்பான ரேகா நாயர், திருவான்மியூர் கடற்கரையில் பயில்வான் ரங்கநாதன் வாக்கிங் வந்தபோது அவருடன் நடுரோட்டில் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, அவரை அடிக்கவும் முயன்றார். இதுகுறித்த வீடியோ காட்சிகள் வெளியாகி வைரல் ஆனது.

இதையும் படியுங்கள்... பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை நடத்தும் ‘பிச்சைக்காரன் 2’... மூன்றே நாளில் இத்தனை கோடி கலெக்‌ஷனா?

Tap to resize

இதையடுத்து பட விழா ஒன்றில் கலந்துகொண்ட தயாரிப்பாளர் கே ராஜனிடம் எடக்குமுடக்கான கேள்விகளை கேட்டதால், அவருக்கும் பயில்வானுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இப்படி சினிமா பிரபலங்களைப் பற்றி பேசு சர்ச்சைகளில் சிக்கி வரும் பயில்வானுக்கு பிரபலங்கள் பதிலடி கொடுக்கும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. சமீபத்தில் இராவண கோட்டம் பட பிரஸ்மீட்டில் சாந்தனு, பயில்வானுக்கு பதிலடி கொடுத்தார்.

அந்த வகையில், நேற்று சென்னையில் நடந்த பிரியமுடன் பிரியா என்கிற திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட நடிகையும், இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணன், அந்த நிகழ்ச்சி தொகுப்பாளினியான ரேகா நாயரை பார்த்து எங்கம்மா உன் பிரெண்ட்டு பயில்வான் என நக்கலாக கேட்டார். பின்னர் கே.ராஜனைப் பார்த்து நீங்க வந்திருப்பதால் பயந்துட்டாரு போல என கலாய்த்து பேசி இருந்தார். அவரின் இந்த பேச்சை கேட்டு அங்கு வந்திருந்த பிரபலங்கள் அனைவரும் சிரித்தனர்.

இதையும் படியுங்கள்... வரலட்சுமியை ஷங்கர் படத்தில் நடிக்க அனுமதிக்காத சரத்குமார் - அப்பாவின் கண்டிஷனால் பறிபோன 3 பிளாக்பஸ்டர் படங்கள்

Latest Videos

click me!