நடிகர் சரத்குமாரின் மகளான வரலட்சுமி, கடந்த 2012-ம் ஆண்டு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான போடா போடி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக காலடி எடுத்து வைத்தார். முதல் படத்திலேயே சிம்புவுக்கு ஜோடியாக நடித்த வரலட்சுமி, அப்படத்தில் சால்சா டான்சராக தன் நடன திறமையையும் வெளிப்படுத்தி அசத்தி இருந்தார். போடா போடி படத்துக்கு பின்னர் கன்னடம், மலையாளம் போன்ற பிறமொழி படங்களிலும் நடிக்கும் வாய்ப்பு வரலட்சுமிக்கு கிடைத்தது.