சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் 'ஜெயிலர்' படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில், இதைத்தொடர்ந்து தன்னுடைய மகள் ஐஸ்வர்யா இயக்கும் 'லால் சலாம் ' படத்தில், எக்ஸ்டெண்டட் கேமியோ ரோலில் நடித்து வருகிறார். இந்த படத்தின் இரண்டாம் கட்ட படபிடிப்பு மும்பையில் கடந்த சில தினங்களாக நடந்து வரும் நிலையில், நேற்றைய தினம் தன்னுடைய படப்பிடிப்பை முடித்துக் கொண்டு சென்னை திரும்பினார் ரஜினிகாந்த்.
சமீபத்தில் வெளியான தகவலில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு வில்லனாக நடிக்க, நடிகர் விக்ரமிடம் பேச்சு வார்த்தை நடத்தி இருப்பதாகவும், அவருக்கு கதை மிகவும் பிடித்து விட்டதால்... இதில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளதாகவும், விக்ரமுக்கு சம்பளமாக 50 கோடி ரூபாய் கொடுக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியானது.
இப்படி அடுத்தடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 170 ஆவது படம் குறித்த தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், இந்த படத்தின் கதை குறித்த தகவலும் கசிந்துள்ளது. அதாவது இப்படம் போலி என்கவுண்டர் நடத்தப்பட்ட ஒரு உண்மைக் கதையை மையமாக வைத்தே எடுக்கப்பட உள்ளதாம். இந்த படத்தில் ரஜினிகாந்த் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியாக நடிக்க இருப்பதாகவும், அதே போல் ஜெய் பீம் படத்தை போலவே இந்த படத்திலும்... ஒரு முக்கியமான சமூக கருத்தை இயக்குனர் ஞானவேல் கூற உள்ளதாக தெரிகிறது. எனவே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வாரே... வா... தளபதி 68 படத்தில் விஜய்க்கு வில்லன் இவரா? அப்போ காத்திருக்கு செம்ம சம்பவம்!