தமிழ் சினிமாவில், குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் ரசிகர்களின் மனம் கவர்ந்த கதாநாயகியாக, வலவந்தவர் நடிகை மீனா. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற தென்னிந்திய மொழிகளில் டாப் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
இவர்களை தொடர்ந்து, அர்ஜுன், சரத்குமார், விஜயகாந்த், கார்த்தி, முரளி, மோகன் லால், மம்மூட்டி போன்ற பிரபலங்களுக்கு ஜோடியாகவும் நடித்துள்ளார். பட வாய்ப்புகள் குறைய தொடங்கிய பின்னர், சீரியலிலும் கதாநாயகியாக நடித்த மீனா.. பின்னர் வித்யாசாகர் என்பவரை கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் மீனாவின் கணவர் வித்யாசாகர், கடந்தாண்டு நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கணவர் மறைவுக்கு பின்னர், மன உளைச்சலுக்கு ஆளான நடிகை மீனா... வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்த நிலையில், இவரின் தோழிகள் தான் இவருடைய மனதில் மாற்றி மீண்டும் சகஜ நிலைக்கு கொண்டு வந்தனர்.
இந்த நிகழ்ச்சி குறித்து முதலில் மீனாவிடம் அந்த யூடியூ ப் சேனல் அணுகியபோது, தன்னால் இந்த நிகழ்ச்சிக்கும் வர முடியாது என மீனா மறுத்ததாகவும், பின்னர் இரவு 8 மணியில் இருந்து, 10 மணி வரை அதாவது இரண்டு மணி நேரம் மட்டுமே நிகழ்ச்சியில் கலந்து கொள்வேன் என கூறினாராம். இதற்க்கு பேரம் பேசி 13 லட்சம் ரூபாய் சம்பளமாக மீனா பெற்றுக்கொண்டதாக பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.