விஜய் ஆண்டனி நடிப்பில் சசி இயக்கத்தில் கடந்த 2016-ம் ஆண்டு ரிலீஸ் ஆன திரைப்படம் பிச்சைக்காரன். இப்படம் பிரம்மாண்ட வெற்றியை ருசித்ததோடு, பாக்ஸ் ஆபிஸிலும் பிரம்மாண்ட வசூலை வாரிக்குவித்தது. விஜய் ஆண்டனி கெரியரில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய படமாகவும் பிச்சைக்காரன் அமைந்தது. இப்படம் தமிழைப் போல் தெலுங்கிலும் விஜய் ஆண்டனிக்கு மிகப்பெரிய மார்க்கெட்டை உருவாக்கி கொடுத்தது.
பிச்சைக்காரன் படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றிக்கு பின்னர் அதன் இரண்டாம் பாகம் தற்போது ரிலீஸ் ஆகி உள்ளது. இப்படத்தையும் முதலில் சசி தான் இயக்குவதாக இருந்தது. ஆனால் வேறு ஒரு படத்தில் அவர் பிசியானதால் இப்படத்தை இயக்கும் வாய்ப்பு வெவ்வேறு இயக்குனர்களது கைக்கு சென்றது. பின்னர் யாரும் செட் ஆகாததால், தானே இயக்கும் பொறுப்பை எடுத்துக்கொண்டு, இப்படம் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்தார் விஜய் ஆண்டனி.
பிச்சைக்காரன் முதல் பாகத்திற்கும் 2-ம் பாகத்திற்கும் சுத்தமாக சம்மந்தமே இல்லாமல் இருந்ததோடு, திரைக்கதையும் சொதப்பலாக இருந்ததாக இப்படத்திற்கு முதல் நாளே நெகடிவ் விமர்சனங்கள் குவிந்ததால், இப்படத்தில் வசூலும் குறைவாகவே இருக்கும் என கூறப்பட்ட நிலையில், யாரும் எதிர்பார்க்காத விதமாக பிச்சைக்காரன் 2 திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் பட்டைய கிளப்பி வருகிறது.