கேரளாவை சேர்ந்த நடிகை நயன்தாரா, தமிழ் படங்களில் நடித்ததன் மூலம் தான் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார். தமிழ் திரையுலகில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் முன்னணி ஹீரோயினாக வலம் வந்துகொண்டிருக்கும் நயன்தாரா, கடந்த ஆண்டு தான் திருமணம் செய்துகொண்டார். அவர் தன் நீண்ட நாள் காதலனான விக்னேஷ் சிவனை கடந்த ஆண்டு ஜூன் மாதம் கரம்பிடித்தார். திருமணத்துக்கு பின்னரும் சினிமாவில் பிசியாக நடித்து வருகிறார் நயன்.
நடிகை நயன்தாராவுக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தது. அவர் வாடகைத் தாய் முறையில் இந்த குழந்தைகளை பெற்றுக்கொண்டார். குழந்தை பிறந்த பின்னர் அதனை கவனிப்பதற்காக சில மாதங்கள் சினிமாவில் இருந்து விலகியே இருந்த நயன்தாரா, தற்போது மீண்டும் படங்களில் நடிக்கத் தொடங்கி உள்ளார். தற்போது நடிகை நயன்தாரா, ஷாருக்கானின் ஜவான் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் மும்பையில் நடைபெற்று வருகிறது.
இதையும் படியுங்கள்... இலங்கை பெண்ணுடன் சிம்புவுக்கு திருமணம்..? பரபரப்பாக நடக்கிறதா ஏற்பாடுகள்..!
இதைத் தொடர்ந்து ஜெயம் ரவி உடன் இறைவன், துரை செந்தில்குமார் இயக்கும் படம், லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் ஒரு படம் என ஏராளமான படங்களை கைவசம் வைத்துள்ள நயன்தாரா, இந்த படங்களில் நடித்து முடித்த பின்னர் சினிமாவை விட்டு விலக முடிவு எடுத்துள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் தகவல் பரவி வருகிறது. குழந்தைகளை கவனித்துக் கொள்வதற்காக நயன்தாரா இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
நயன்தாரா நடிப்புக்கு மட்டுமே முழுக்கு போட உள்ளதாகவும், இருப்பினும் அவர் தொடர்ந்து தயாரிப்பு பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவார் என தகவல்கள் பரவி வருகின்றன. விக்கியும், நயனும் இணைந்து ரெளடி பிக்சர்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகின்றனர். அதன்மூலம் ஏராளமான படங்களை தயாரித்தும், வெளியிட்டும் வருகின்றனர். அந்த வகையில் அந்நிறுவனம் தயாரிப்பில் கடைசியாக நயன்தாரா நடித்த கனெக்ட் திரைப்படம் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... வேறு வழியே இல்லாமல்... 'ராஜா ராணி 2' சீரியல் உள்ளே வந்த ஆஷா கவுடா! ரியாவை வெளியேற்ற காரணம் இது தான்!