யாருக்குமே இப்படியொரு நிலை வரக்கூடாது... கே.வி.ஆனந்த் உடலை தூரத்தில் இருந்து பார்த்து கதறிய மனைவி, மகள்கள்...!

First Published Apr 30, 2021, 12:52 PM IST

சென்னையில் மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் மாரடைப்பு காரணமாக அனுமதிக்கப்பட்ட கே.வி.ஆனந்த், இன்று அதிகாலை 3 மணி அளவில் மரணமடைந்தார். 

தமிழ் திரையுலகில் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகி, பின்னர் வெற்றி இயக்குநராகவும் வலம் வந்தவர் கே.வி.ஆனந்த். சிவாஜி, காதல் தேசம் போன்ற படங்களில் ஒளிப்பதிவாளராகவும், கனா கண்டேன், கோ, அயன், காப்பான், மாற்றான், அநேகன் என வெற்றிப்படங்களை இயக்கியும் உள்ளார்.
undefined
சென்னையில் மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் மாரடைப்பு காரணமாக அனுமதிக்கப்பட்ட கே.வி.ஆனந்த், இன்று அதிகாலை 3 மணி அளவில் மரணமடைந்தார்.
undefined
இந்நிலையில் கடந்த 24ம் தேதியே கொரோனா தொற்று காரணமாக மியாட் மருத்துவமனையில் கே.வி.ஆனந்த் அனுமதிக்கப்பட்டிருந்து தற்போது தெரியவந்துள்ளது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தீவிர சிகிச்சை எடுத்து வந்த அவர், இன்று காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தது தெரியவந்துள்ளது.
undefined
கே.வி.ஆனந்திற்கு கொரோனா தொற்று இருந்ததால் அவருடைய உடலை மருத்துவமனையில் இருந்து நேராக பெசன்ட் நகர் சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்ல அறிவுறுத்தப்பட்டது. ஆனால் அவரது குடும்பத்தினரின் வேண்டுகோளை ஏற்று வீட்டில் 5 நிமிடங்கள் மட்டுமே அஞ்சலிக்காக கே.வி.ஆனந்த் உடல் வைக்கப்பட்டது.
undefined
அப்போது கொரோனா கட்டுப்பாடுகளின் படி தூரமாக நின்று கே.வி.ஆனந்தின் தாயார், மனைவி, மகள்கள் ஆகியோர் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.
undefined
அதன் பின்னர் கண்ணாடி பெட்டிக்குள் வைக்கப்பட்ட நிலையிலேயே கே.வி.ஆனந்தின் உடல் பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு உறவினர்கள் இறுதிச் சடங்குகளை செய்தனர்.
undefined
உறவினர்களின் இறுதி மரியாதை மற்றும் சடங்குகளுக்குப் பிறகு கே.வி.ஆனந்தின் உடல் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
undefined
click me!