அடக்கொடுமையே... கே.வி.ஆனந்த் மரணத்திற்கு இப்படியொரு காரணமா?... மருத்துவமனையில் இருந்து வெளியான பரபரப்பு தகவல்!

First Published Apr 30, 2021, 11:24 AM IST

தமிழ் திரையுலகில் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகி, பின்னர் வெற்றி இயக்குநராகவும் வலம் வந்தவர் கே.வி.ஆனந்த். 

தமிழ் திரையுலகில் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகி, பின்னர் வெற்றி இயக்குநராகவும் வலம் வந்தவர் கே.வி.ஆனந்த்.
undefined
முதல் படத்திலேயே சிறந்த ஒளிப்பதிவாளர் என்ற தேசிய விருது பெற்றவர். இயக்குநராகவும் கனா கண்டேன், கோ, அயன், காப்பான், மாற்றான், அநேகன் என வெற்றிப்படங்களை இயக்கியுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குநராக வலம் வந்த கே.வி. ஆனந்த் இன்று அதிகாலை மாரடைப்பால் காலமானார்.
undefined
சென்னையில் மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் மாரடைப்பு காரணமாக அனுமதிக்கப்பட்ட கே.வி.ஆனந்த், இன்று அதிகாலை 3 மணி அளவில் மரணமடைந்தார்.
undefined
இந்நிலையில் கடந்த 24ம் தேதியே கொரோனா தொற்று காரணமாக மியாட் மருத்துவமனையில் கே.வி.ஆனந்த் அனுமதிக்கப்பட்டிருந்து தற்போது தெரியவந்துள்ளது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தீவிர சிகிச்சை எடுத்து வந்த அவர், இன்று காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் மரணமடைந்தார்.
undefined
கொரோனா சிகிச்சையில் இருக்கும் போதே அவர் இறக்கும் போது, அவர் மரணத்திற்கு பிறகு மீண்டும் ஒருமுறை கொரோனா பரிசோதனை செய்யப்படும். அப்போதும் அவருக்கு தொற்று உறுதியானால் அதன் பின்னரே கொரோனா மரணமாக அது மருத்துவமனை நிர்வாகத்தால் அறிவிக்கப்படும்.
undefined
அப்படி கே.வி.ஆனந்தின் உடலுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் அவருடைய உடல் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டு 5 நிமிடம் மட்டுமே அங்கு வைக்கப்படுகிறது. அதன் பின்னர் நேரடியாக பெசன்ட் நகர் மின்மயானத்திற்கு எடுத்துச் சென்று தகனம் செய்யப்பட உள்ளது.
undefined
click me!