தமிழில் கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற 'குடும்பஸ்தன்' திரைப்படம் மூலம் பிரபலமானவர் தான் சான்வி மேக்னா. ஹைதராபாத்தை சேர்ந்த சான்வி, தெலுங்கில் சீரியல் நடிகையாகவும், மாடலாகவும் தன்னுடைய பணியை துவங்கிய நிலையில்... பின்னர் திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் நடிக்க துவங்கினார். தெலுங்கில் இவர் நடிப்பில் வெளியான படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், பின்னர் தமிழிலும் கால்பதித்தார்.