Indraja Robo Shankar: மறைந்த நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா, அப்பாவுக்கு பிடித்த புகைப்படத்துடன் உருக்கமாக வெளியிட்டுள்ள பதிவு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
தளபதி விஜய், அஜித், தனுஷ், போன்ற பல முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி வேடத்திலும், குணசித்ர வேடத்திலும் நடித்து பிரபலமானவர் ரோபோ சங்கர் . இவருக்கு ஏற்கனவே கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன், தீவிர மஞ்சள் காமாலை ஏற்பட்டு அது ரத்தத்தில் கலந்ததால் சாவின் விளிம்பிற்கே சென்று திரும்பி வந்தார். இவரை பழையபடி மீட்டு கொண்டுவந்தது இவரின் மனைவி ப்ரியங்கா மற்றும் மகள் இந்திரஜா தான். அதே போல் இந்திராஜாவின் கணவர் கார்த்திக் ரோபோ சங்கரன் ஒரு மருமகனாக இல்லாமல், மகனாக இருந்து கவனித்து கொண்டார்.
பூரண உடல்நலம் தேறி மீண்டும் திரைப்படங்களில் நடிக்க துவங்கிய நிலையில் தான்.. ரோபோ சங்கர் திடீர் என, படப்பிடிப்பு தளத்திலேயே ரத்த வாந்தி எடுத்து மயங்கி விழுந்துள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவரை பரிசோதித்த மருத்துவர்கள், நீர்சத்து குறைபாடு மற்றும் ரத்த அழுத்தம் இருப்பதாக முதலில் கூறியுள்ளனர்.
35
ரோபோ மரணம்:
பின்னர் இவருடைய உடல்நிலை பின்னடைவை சந்தித்த நிலையில்... மேல்சிகிச்சைக்காக வேறு ஒரு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு இவருக்கு கல்லீரலில் பிரச்சனை இருப்பதும், செரிமான குழாயில் ரத்தக்கசிவு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து மருத்துவர்கள் தீவிர சிகிச்சை கொடுத்துவந்த நிலையில், ரோபோ ஷங்கர் கடந்த வாரம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது இழப்புக்கு பல பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தொடர்ந்து தங்களின் இரங்கலை தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் தான் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா மிகவும் உருக்கமான பதிவு ஒன்றை போட்டுள்ளார். இந்த பதிவுல் கூறியுள்ளதாவது, "அப்பா நீங்க இல்லாமல் 3 நாள்கள் ஆகிவிட்டது. எங்களை நேரிய சிரிக்க வெச்சதும் நீ தான்... இப்போ நிறைய அழ வைக்கிறதும் நீ தான். இந்த மூன்று நாள் எனக்கு உலகமே தெரியல. நீ இல்லாம நம்ப ஃபேமிலியை நாங்க எப்படி கொண்டு போக போறோம் அப்படினு தெரியல. ஆனால் நீ எனக்கு சொல்லி கொடுத்த மாறி கண்டிப்பா நான் வலிமையா இருப்பேன் அப்பா. தம்பி இந்த மூன்று நாட்களா ரொம்ப தேடுறான்பா உன்னை. கண்டிப்பா நீ உன்னோட நண்பர்கள் மற்றும் ஆண்களோடு மேல சந்தோஷமா தான் அப்பா இருப்ப.
நீ சொல்லி கொடுத்த மாதிரி விமர்சனங்களுக்கு பயபுடமாட்டேன் அப்பா. கண்டிப்பா உன்னோட பொண்ணுன்னு பேர காப்பாத்துவேன். உங்கள பெருமை பட வைப்பேன். லவ் யூ... மிஸ் யூ அப்பா.
55
அப்பாவுக்கு பிடித்த புகைப்படம்:
உங்களுக்கும் எனக்கும் ரொம்ப பிடிச்ச போட்டோ இது. எல்லோருமே எந்த போட்டோ பார்த்துட்டு சொல்லுவாங்க அப்படியே உங்க அப்பா ஜெராக்ஸ்னு. நானும் அப்படி இருக்கவே ஆசைப்படுறேன். என கூறி... அப்பாவை மிஸ் பண்ணுவதாகவும், மன்னித்துவிடும்படி கூறியுள்ளார் இந்திரஜா.