கவின் ஹீரோவாக நடித்த கிஸ் திரைப்படம் கடந்த செப்டம்பர் 19-ந் தேதி திரைக்கு வந்த நிலையில், அப்படம் பாக்ஸ் ஆபிஸில் பயங்கர அடிவாங்கி உள்ளது. அதன் மூன்று நாள் வசூல் நிலவரத்தை பார்க்கலாம்.
சிவகார்த்திகேயனுக்கு அடுத்தபடியாக சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து ஜொலிப்பவர் கவின். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலில் வேட்டையன் கதாபாத்திரத்தில் நடித்து பாப்புலர் ஆனார். அதன்பின்னர் விஜய் டிவியின் புகழ்பெற்ற ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டார். அந்நிகழ்ச்சியில் கப்பு ஜெயிக்கும் அளவுக்கு பெயரையும் புகழையும் பெற்றிருந்த கவின், பணப்பெட்டியுடன் பாதியிலேயே வெளியேறினார். இதனால் பிக் பாஸ் கோப்பை வெல்லும் வாய்ப்பு பறிபோனது.
24
நம்பிக்கை நட்சத்திரம் கவின்
பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழ்வெளிச்சம் கிடைத்த பின்னர் சினிமாவில் தன்னுடைய முழு கவனத்தையும் செலுத்த தொடங்கிய கவின், லிஃப்ட் என்கிற படத்தில் ஹீரோவாக நடித்தார். அப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து அவர் நாயகனாக நடித்த டாடா என்கிற திரைப்படம் கடந்த 2023-ம் ஆண்டு ரிலீஸ் ஆகி பாக்ஸ் ஆபிஸில் ரூ.50 கோடிக்கு மேல் வசூலித்து பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. அப்படத்தின் வெற்றிக்கு கோலிவுட்டின் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்தார் கவின். அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் குவியத் தொடங்கின.
34
தொடர் தோல்வியை சந்தித்த கவின்
டாடா படத்தின் வெற்றிக்கு பின்னர் கவின் நடித்த படம் ஸ்டார். இப்படத்திற்கு மிகப்பெரிய ஓப்பனிங் கிடைத்தது. குறிப்பாக முதல் நாளிலேயே தமிழ்நாட்டில் 4 கோடி வசூல் செய்யும் அளவுக்கு வரவேற்பு இருந்தது. ஆனால் படம் ரசிகர்களை கவராததால் விமர்சன ரீதியாக ஸ்டார் தோல்வியை சந்தித்தது. அதன்பின்னர் கடந்த ஆண்டு தீபாவளிக்கு கவின் நடித்த ப்ளெடி பெக்கர் திரைப்படம் ரிலீஸ் ஆனது. அப்படத்துக்கு போட்டியாக வெளிவந்த அமரன் சக்கைப்போடு போட்டதால், ப்ளெடி பெக்கர் வந்த சுவடே தெரியாமல் தியேட்டர்களில் இருந்து தூக்கி வீசப்பட்டு படுதோல்வி அடைந்தது.
எப்படியாவது ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் கவின் நடிப்பில் கடந்த வாரம் கிஸ் என்கிற திரைப்படம் ரிலீஸ் ஆனது. இப்படம் முதல் நாளில் இருந்தே வசூலில் டல் அடிக்கிறது. முதல் நாள் 40 லட்சம் மட்டுமே வசூலித்தது. இரண்டாம் நாளில் 68 லட்சம் வசூல் செய்த இப்படம் மூன்றாம் நாளான நேற்று ஞாயிற்றுக்கிழமை அன்று வெறும் 59 லட்சம் மட்டுமே வசூலித்து உள்ளது. ஒரு நாள் கூட இப்படம் கோடிகளில் வசூல் செய்யவில்லை. தற்போது மூன்று நாட்கள் முடிவில் ரூ. 1.67 கோடி மட்டுமே இப்படம் வசூலித்து இருக்கிறது. வார நாட்களில் இதன் வசூல் மேலும் குறைய வாய்ப்பு உள்ளதால் கவினுக்கு அடுத்த தோல்வி படமாக கிஸ் அமைய வாய்ப்புகள் அதிகம் உள்ளது.