லியோ படத்திற்கு பின் நடிகர் விஜய் நடிக்க உள்ள திரைப்படம் தளபதி 68. இப்படத்தை வெங்கட் பிரபு இயக்க உள்ளதாகவும், ஏஜிஎஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க உள்ளதாகவும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அதுமட்டுமின்றி இப்படத்தின் மூலம் நடிகர் விஜய்யுடன் நீண்ட நாட்களுக்கு பின் கூட்டணி அமைக்க உள்ளார் யுவன் சங்கர் ராஜா. இதனால் ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு எகிற தொடங்கி உள்ளது.
24
தளபதி 68 படத்தின் அப்டேட்டுகள் லியோ படம் ரிலீஸ் ஆன பின்னர் தான் வெளியாகும் என வெங்கட் பிரபு சொல்லிவிட்டாலும், அதில் நடிக்க உள்ள நடிகர், நடிகைகள் பற்றிய தகவல்கள் தொடர்ந்து கசிந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் தளபதி 68-ல் நடிகர் விஜய்க்கு வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடிக்க உள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியான நிலையில், தற்போது அப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க உள்ள நடிகை பற்றிய ஹாட் அப்டேட் கசிந்துள்ளது.
அதன்படி தளபதி 68 படத்தில் விஜய்க்கு ஜோடியாக தெலுங்கு நடிகை கீர்த்தி ஷெட்டி நடிக்க உள்ளதாக தகவல் பரவி வருகிறது. நடிகை கீர்த்தி ஷெட்டிக்கு 19 வயது தான் ஆகிறது. மகள் வயதில் இருக்கும் அந்த நடிகையுடனா விஜய் ஜோடி சேர்ந்து நடிக்கப்போகிறார் என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். மறுபுறம் கீர்த்தி ஷெட்டி, நடிகர் விஜய்யின் தீவிர ரசிகை ஆவார். அவர் விஜய்யுடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என்றும் சமீபத்திய பேட்டிகளில் விருப்பம் தெரிவித்து இருந்தார்.
44
அவரின் ஆசை தளபதி 68 படம் மூலம் நிறைவேறப்போவது போல் தெரிகிறது. நடிகை கீர்த்தி ஷெட்டி ஏற்கனவே வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான கஸ்டடி படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இவர் தெலுங்கில் சமீபத்தில் நடித்த படங்கள் அனைத்தும் வரிசையாக தோல்வியை தழுவி வருகின்றன. அதனால் தளபதி 68 படம் மூலம் கீர்த்தி ஷெட்டி கம்பேக் கொடுப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.