நடிகை ராஷ்மிகா நேஷ்னல் கிரஷ் என்கிற பெயரை எடுத்திருந்தாலும், சமீப காலமாக தென்னிந்திய திரையுலகில் இவர் நடித்த படங்கள் சொல்லிக்கொள்ளும் படி அமையவில்லை. கடைசியாக இவர் ஹீரோயினாக நடித்து வெற்றிபெற்ற திரைப்படம் என்றால், அது புஷ்பா திரைப்படம் தான்.
ஹிந்தியில் இவர் நடிப்பில் வெளியான, குட் பை மற்றும் மிஷன் மஜ்னு ஆகிய படங்கள் அடுத்தடுத்து தோல்வியை தழுவியது. அதே போல் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிக்கா நடித்த வாரிசு திரைப்படமும் கலவையான விமர்சனங்களுடனே ரசிகர்களை கடந்து சென்றது. ஆனால் வாரிசு படத்தில் இடம்பெற்ற பாடல்களுக்காவும், நடனத்திற்காகவும் ராஷ்மிகா அதிகம் பேசப்பட்டார்.
இதை தொடர்ந்து, ராஷ்மிகா தற்போது இரண்டு புதியபடங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். நிதின் நடிப்பில் வெங்கி குடுமுலா இயக்கத்தில் உருவாகும் ஒரு படத்திலும், ரெயின்போ என்ற தலைப்பில் பல மொழிகளில் உருவாகும் திரைப்படத்திலும் நடிக்க உள்ளார். இந்த படத்தில் ராஷ்மிகாவுக்கு ஜோடியாக தேவ் மோகன் நடிக்கிறார். இது ஒரு கற்பனை உணர்ச்சிக் காதல் கதை என கூறப்படுகிறது. தற்போது ரெயின்போ ஷூட்டிங் பணிகளில் ராஷ்மிகா தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.
'பிச்சைக்காரன் 2' எதிரொலி? திருப்பதியில் உள்ள பிச்சைக்காரர்களுக்கு ஓடி சென்று உதவிய விஜய் ஆண்டனி!
மேலும் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக இவர் நடித்து வரும் புஷ்பா 2 படமும் மிகவும் எதிர்பார்க்க கூடிய படங்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த படம், இந்த ஆண்டு கிருஸ்துமஸ் தினத்தை குறிவைத்து வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.
அந்த வகையில், இவர் சிவப்பு நிற... கோட் - சூட் அணிந்து, லேடி பாஸ்சாக மாறி, செம்ம ஸ்டைலிஷாக வெளியிட்டுள்ள போட்டோஸ், ரசிகர்கள் மத்தியில் படு வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.