Published : May 25, 2023, 07:25 PM ISTUpdated : May 26, 2023, 09:34 AM IST
பல தமிழ் படங்களில் வில்லனாகவும், குணச்சித்திர நடிகராகவும் நடித்து பிரபலமான ஆஷிஷ் வித்யார்த்தி தன்னுடைய 60 வயதில், 2-ஆவது திருமணம் செய்து கொண்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தி திரைப்படத்தின் மூலம் கடந்த 1991 ஆம் ஆண்டு குணச்சித்திர நடிகராக அறிமுகமான ஆஷிஷ் வித்யார்த்தி, தமிழில் 'தில்' படத்தின் மூலம் பிரபலமானவர். முதல் படத்திலேயே விக்ரமுக்கு முரட்டு வில்லனாக நடித்து மிரட்டி இவர், பின்னர் அடுத்தடுத்து பல தமிழ் படங்களில் நடித்தார்.
26
குறிப்பாக ரஜினிக்கு வில்லனாக பாபா, அர்ஜுனுக்கு வில்லனாக ஏழுமலை, விஜய்க்கு வில்லனாக பகவதி, போன்ற முன்னணி நடிகர்களுக்கு வில்லனாகவும், ஒரு சில படங்களில் தந்தை, சித்தப்பா போன்ற குணச்சித்திர வேடத்திலும் நடித்துள்ளார். அதே போல் இவர், தளபதி விஜய்க்கு அப்பாவாக நடித்த 'கில்லி' திரைப்படம் ஆல்வேஸ் ரசிகர்களின் ஃபேவரட் லிஸ்டில் உள்ளது.
சமீபகாலமாக தமிழ் படங்களில் இவர் அதிகம் நடிப்பது இல்லை என்றாலும், ஹிந்தி தெலுங்கு மலையாளம் பெங்காலி போன்ற மொழிகளில் அதிகம் நடித்து வருகிறார். மேலும் சமூக வலைதளத்திலும் மிகவும் ஆக்டிவாக செயல்படும் ஆஷிஷ் வித்யார்த்தி அவ்வப்போது, தன்னுடைய வீடியோக்களையும், புகைப்படங்களையும் வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.
46
இவர் ஏற்கனவே ரஜோஷி என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில், முதல் மனைவியின் மூலம் இவருக்கு மகள் ஒருவரும் உள்ளார். இந்நிலையில் முதல் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்த ஆஷிஷ் வித்யார்த்தி, ரூபாலி பருவ என்கிற பெண்ணை தன்னுடைய 60-வது வயதில் திருமணம் செய்து கொண்டுள்ளார். தற்போது ஆஷிஷ் வித்யார்த்தி, ரூபாலி பருவ ஜோடி மாலையும் கழுத்துமாக இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
மேலும் இவர்களுடைய திருமணம் இன்று கல்கத்தாவில் நடந்து முடிந்துள்ளது. இவர்களுடைய திருமணத்தில் நெருங்கிய குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. ஆஷிஷ் வித்யார்த்தி, திருமணம் செய்து கொண்டுள்ள ரூபாலி கௌஹாத்தியில் பேஷன் ஸ்டோர் ஒன்றை நடத்தி வருகிறார்.
66
ஆஷிஷ் வித்யாதிரி இதுவரை சுமார் 200க்கும் மேற்பட்ட படங்களில் 11 மொழிகளில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இவருடைய திருமண புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் படுவைரலாக பார்க்கப்பட்டு, ரசிகர்கள் மத்தியில் வாழ்த்துக்களை குவித்து வருவது குறிப்பிடத்தக்கது.