'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் சர்ச்சையான கதைக்களத்திற்காக பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டது. அதாவது கேரளாவை சேர்ந்த, பல்லாயிரக்கணக்கான இளம் பெண்களை கட்டாயப்படுத்தி, மதம் மாற்றம் செய்து, வெளிநாட்டுக்கு அழைத்து சென்று பயங்கரவாத அமைப்புகளால் தீவிரவாத பணிகளுக்கு பயன்படுத்த பட்டனர் என தெரிவிக்கப்பட்டிருந்தது. எனவே, இப்படத்திற்கு எதிராக எதிர்ப்புகள் எழுந்தன. மேற்கு வங்கத்தில் இப்படத்திற்கு தடை விதிக்கப்பட்டது மட்டும் இன்றி, தமிழகத்திலும் மூன்றே நாட்களில் இப்படம் திரையரங்குகளில் இருந்து வாஷ் அவுட் ஆனது.