உனக்கு 46..எனக்கு 18..சூர்யாவுக்கு ஜோடியாகும் இளம் நாயகி.. வெளியான அதிகாரப்பூர்வ தகவல்

Kanmani P   | Asianet News
Published : Mar 28, 2022, 03:30 PM ISTUpdated : Mar 28, 2022, 03:33 PM IST

18 வயதான கீர்த்தி செட்டி தெலுங்குத் திரைப்படங்களில் நடித்து வருகிறார். ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்ற உப்பெனா (2021) திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

PREV
18
உனக்கு 46..எனக்கு 18..சூர்யாவுக்கு ஜோடியாகும் இளம் நாயகி.. வெளியான அதிகாரப்பூர்வ தகவல்
etharkum thuninthavan

தூள் கிளப்பிய எதற்கும் துணிந்தவன் : 

இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில்சூர்யா நடிப்பில் வெளிவந்த சமீபத்திய படைப்பு  எதற்கும் துணிந்தவன்.  இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக டாக்டர் பட நடிகை பிரியங்கா மோகன் (Priyanka Mohan) நடித்துள்ளார். இவர்களுடன் சரண்யா, சத்தியராஜ் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

28
ET

குடும்ப ரசிகர்களை ஈர்த்த சூர்யா :

பெண்களுக்கு நிகழும் பாலியல் இன்னல்கள் குறித்த கதையம்சத்தை கொண்ட இந்த படம் குடும்ப ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது. சன்பிக்சர்ஸ் தயரிப்பில் உருவான இந்த படத்தில் நாயகனின் பெற்றோர்களாக  சரண்யா பொன்வண்ணன்,  சத்யராஜ் நடித்துள்ளனர்.   வில்லனாக வினய் அசத்தியுள்ளார். 

38
vaadivaasal

கிடப்பில் கிடந்த வாடிவாசல் :

எதற்கும் துணிந்தவன் படத்திற்கு பிறகு வெற்றி மாறனின் வாடிவாசல் படத்தில் சூர்யா நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டது. ஆனால் வருடங்களாகியும் படப்பிடிப்புக்கு வாடிவாசல் வரவில்லை. 

மேலும் செய்திகளுக்கு...RRR movie day 3: படத்தின் மொத்த செலவை மூன்றே நாளில் வசூல் செய்த 'ஆர்ஆர்ஆர்' படம்..! எத்தனை கோடி தெரியுமா..?

48
Vaadivaasal

பரபரப்பாக டெஸ்ட் சூட் :

இதற்கிடையே பாலா படத்தில் சூர்யா ஒப்பந்தமாகிவிட்டார். பின்னர் அவசர அவசரமாக வாடிவாசல் டெஸ்ட் சூட் சென்னைக்கு அருகில் நடைபெற்றது. ஜல்லிக்கட்டு செட் போடப்பட்டு நான்கு நாட்கள் மட்டுமே இந்த படப்பிடிப்பு நடைபெற்றது. இதன்பிறகு பாலா படம் முடிவடைந்த பிறகே வாடிவாசலில் சூர்யா கலந்து கொள்வார் என தெரிகிறது.

58
suriya 41

நந்தா கூட்டணியில் சூர்யா :

எதற்கும் துணிந்தவனின் வெற்றியை தொடர்ந்து  சூர்யாவின் சினிமா வாழ்க்கையில் ஒரு மைல் கல்லாக அமைந்த நந்தா பட இயக்குனர் பாலாவுடன் கைகோர்த்துள்ளார். இவர்கள் கூட்டணியில் உருவான  நந்தா, பிதாமகன் என 2 பிளாக்பஸ்டர் ஹிட் படங்களில் நடித்துள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

68
suriya 41

சூர்யாவும், ஜோதிகாவின் தயாரிப்பு :

இப்படத்தை 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சூர்யாவும், ஜோதிகாவும் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தில் பிரபல இசையமைப்பாளர் ஜீ.வி. பிரகாஷ் இசையமைக்கவுள்ளார். இதுகுறித்த போஸ்டரையும் தயாரிப்பு நிறுவனம் பகிர்ந்துள்ளது. முன்னதாக சூர்யாவின் சூரரை போற்று படத்தில் மாஸ் பீஜியம் அமைத்திருந்தார். 

78
suriya 41

பிதாமகன் ஒளிப்பதிவாளர் : 

கன்னியாகுமரி , ராமேஸ்வரம் உள்ளிட்ட கடற்கரையை ஒட்டியுள்ள பகுதியில் படமாக்கப்படவுள்ள சூர்யா 41 -ல் பிதாமகன் ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியன் இணைந்துள்ளார். இவர் ஏற்கவே 2 டி தயாரிப்பான பசங்க 2வில் பணியாற்றியுள்ளார். இந்த படத்தில் சூர்யா குழந்தைகள் மருத்துவராக கலக்கி இருப்பார்.

மேலும் செய்திகளுக்கு.. Yuvan dance: ஜாலி மூடிற்கு சென்ற யுவன் ஷங்கர் ராஜா... பொது இடத்தில் போட்ட குத்தாட்டம்...கலகலப்பு வீடியோ..!

88
c

18 வயதான இளம் நாயகி :

சூர்யா - பாலா கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கி உள்ளது. இதில் சூர்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளது உறுதியாகியுள்ளது. 18 வயதான கீர்த்தி செட்டி தெலுங்குத் திரைப்படங்களில் நடித்து வருகிறார். ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்ற உப்பெனா (2021) திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

click me!

Recommended Stories