பக்கா தமிழ் பெண்ணான இந்துஜா, நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தின் காரணமாக, விடாப்பிடியாக இருந்து தற்போது தமிழ் சினிமாவில் வளரும் நடிகைகள் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.
ரத்ன குமார் இயக்கிய 'மேயாத மான்' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான நடிகை இந்துஜா, பின்னர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய 'மெர்குரி', கண்ணனின் 'பூமராங்', ஆர்யா ஜோடியாக 'மகாமுனி' உள்ளிட்ட பல படங்களில் தனது திறமையான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார்.
அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான 'பிகில்' படத்தில் வேம்பு என்ற கதாபாத்திரத்தில் கால்பந்து வீராங்கனையாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார் இந்துஜா.
தொடர்ந்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்து வரும் இந்துஜா, தற்போது விஜய் ஆண்டனியின் காக்கி, தனுஷுக்கு ஜோடியாக நானே வருவேன் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார்.
திரையுலகில் அறிமுகமானபோது கொழு கொழுவென இருந்த இந்துஜா, தற்போது உடல் எடையை கணிசமாக குறைத்து ஸ்லிம்மான தோற்றத்துக்கு மாறி உள்ளார்.
சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இந்துஜாவுக்கு இன்ஸ்டாகிராமில் 10 லட்சத்துக்கும் அதிகமான பாலோவர்கள் உள்ளனர்.
அவர்களை கவரும் விதமாக, அவ்வப்போது விதவிதமாக ஆடைகளில் போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார் இந்துஜா.