எலும்பும் தோலுமாக நடிகர் அபிநய்; கண்டுகொள்ளாத தனுஷ்... கடவுள் போல் வந்து உதவிய பாலா

Published : Aug 01, 2025, 12:43 PM IST

கல்லீரல் பிரச்சனையால் அவதிப்படும் நடிகர் அபிநய்யை நேரில் சந்தித்த கேபிஒய் பாலா, அவருக்கு பண உதவி செய்து அதன் வீடியோவை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.

PREV
14
KPY Bala Help to Abhinay Kinger

நடிகர் தனுஷ் ஹீரோவாக அறிமுகமான துள்ளுவதோ இளமை திரைப்படத்தில் அவரின் நண்பராக நடித்திருந்தவர் தான் அபிநய். இவர் நடிகராக மட்டுமின்றி சினிமாவில் டப்பிங் கலைஞராகவும் பணியாற்றி இருக்கிறார். குறிப்பாக விஜய் நடித்த துப்பாக்கி படத்தில் வில்லன் வித்யூத் ஜம்வாலுக்கு குரல் கொடுத்தது அபிநய் தான். அடுத்தடுத்து பட வாய்ப்புகள் உடன் நல்ல நிலையில் இருந்த அபிநய்யின் வாழ்க்கை ஒரு கட்டத்தில் தலைகீழாக மாறிப்போனது. அவர் வசம் இருந்த 8 பட வாய்ப்புகள் ஒரே நேரத்தில் கைநழுவி போனதால் கடும் மன உளைச்சலுக்கு ஆளானார் அபிநய்.

24
கல்லீரல் பாதிப்பால் அவதிப்படும் அபிநய்

இதனிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற புகைப்படங்களும் வீடியோவும் வெளியாகி இருந்தது. அதில் வயிறெல்லாம் வீங்கி, பார்ப்பதற்கு ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு இருந்தார். அவருக்கு கல்லீரல் பாதிப்பு உள்ளதாம். அதற்காக மருத்துவ சிகிச்சை பெற போதிய வசதிகள் இல்லாமல் தவித்து வந்தார் அபிநய். இந்த தகவல் நடிகரும், விஜய் டிவி பிரபலமுமான கேபிஒய் பாலாவுக்கு தெரியவர, அவர் உடனடியாக அபிநய்யின் வீட்டுக்கே சென்று அவரை சந்தித்து, அவருக்கு பண உதவி செய்திருக்கிறார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

34
1 லட்சம் கொடுத்த பாலா

பாலாவை பார்த்ததும் தனது உடல்நிலை குறித்து தெரிவித்த அபிநய், அவரிடம் தான் எடுத்த ஸ்கேன் ரிப்போர்ட் ஆகியவற்றை காட்டி விவரிக்கும் காட்சிகள் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன. அந்த வீடியோவில் பார்க்கையில் அபிநய் எலும்பும் தோலுமாக காட்சியளிக்கிறார். மிகவும் சோர்வுடனே காட்சியளிக்கும் அபிநய், சீக்கிரமா போய்டுவேன் பாலா என சொன்னதும் கலங்கிய பாலா, அவரை கட்டியணைத்து ஆறுதல் கூறினார். பின்னர் தன்னுடைய பையில் இருந்து ரூ.1 லட்சம் பணத்தை எடுத்து அபிநய்க்கு உதவி செய்திருக்கிறார். அந்தப் பணத்தை வாங்கியதும் பாலாவுக்கு நன்றி தெரிவித்து அவரை கட்டியணைத்துள்ளார் அபிநய்.

44
பாலாவுக்கு குவியும் வாழ்த்து

தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள அபிநய்க்கு இதுவரை யாருமே உதவ முன்வராமல் இருந்த நிலையில், கடவுள் போல் வந்து நடிகர் பாலா உதவிக்கரம் நீட்டி இருப்பது அனைவர் மத்தியிலும் பாராட்டுக்களை பெற்றுள்ளது. அபிநய் வீட்டை விட்டு கிளம்பும்போது அவரிடம், நீங்கள் சீக்கிரம் குணமாகி படத்தில் நடிக்க வேண்டும், அதில் எனக்கு சான்ஸ் கொடுக்க வேண்டும் என கேட்டிருக்கிறார் பாலா. அவர் மேலும் இதுபோன்ற உதவிகளை செய்ய வேண்டும் என பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர். பாலா தற்போது சினிமாவில் ஹீரோவாக நடித்து வருகிறார். அவர் தனக்கு கிடைக்கும் சம்பளத்தில் பெரும்பாலானதை இதுபோன்று ஏழை எளிய மக்களுக்கு உதவி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories