கர்ப்பத்திற்கு மகேஷ் தான் காரணமா? பஞ்சாயத்தில் ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட் கொடுக்கும் ஆனந்தி! சிங்கப்பெண்ணே சீரியல்

Published : Aug 01, 2025, 10:24 AM ISTUpdated : Aug 01, 2025, 10:27 AM IST

பஞ்சாயத்தில் தன்னுடைய கர்ப்பத்திற்கு யார் காரணம் என்கிற தகவலை ஆனந்தி வெளியிட்டாரா? இல்லையா? என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

PREV
14
Singappenne Serial Today Episode

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரைம் டைம் சீரியல்களில் ஒன்று சிங்கப்பெண்ணே. இந்த சீரியல் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. வார வாரம் டிஆர்பி ரேஸிலும் தொடர்ச்சியாக முதலிடத்தை பிடித்து அசத்தி வருகிறது சிங்கப்பெண்ணே சீரியல். அதற்கு முக்கிய காரணம் இதன் விறுவிறுப்பான கதைக்களம் தான். தற்போது ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம் ஊருக்கே தெரிந்த பின்னர், அவர் கர்ப்பத்திற்கு யார் காரணம் என்பதை கண்டுபிடிக்க பஞ்சாயத்தை கூட்டி இருக்கிறார்கள். அந்த பஞ்சாயத்தில் ஆனந்தி உண்மையை உடைத்தாரா? என்பதை விரிவாக பார்க்கலாம்.

24
ஆனந்தி கர்ப்பமானது எப்படி?

ஆனந்தி தன்னுடைய அக்கா கோகிலாவின் திருமணத்தில் தான் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை ஒப்புக்கொள்கிறார். இருப்பினும் தனது கர்ப்பத்திற்கு யார் காரணம் என்பது தனக்கே தெரியாது என ட்விஸ்ட் கொடுக்கிறார். தான் கல்லூரியில் நடைபெற்ற சில்வர் ஜூப்ளி விழாவில் கலந்துகொண்டபோது திடீரென மயங்கியதாகவும், அந்த சமயத்தில் தான் தன்னுடைய கற்பை பரிகொடுத்ததாகவும் கூறி இருக்கிறார். மறுபுறம் ஆனந்தி மீதுள்ள அதீத காதலால், அவர் கர்ப்பமாக இருந்தாலும் அவரை தான் திருமணம் செய்துகொள்வதாக அன்பு கூறுகிறார். ஆனால் அன்புவின் தாய் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்.

34
அன்புவை காப்பாற்றிய ஆனந்தி

பின்னர் இந்த விவகாரம் ஊர்ப் பஞ்சாயத்துக்கு செல்கிறது. ஊர் பெரியவர்கள் முன்னிலையில் பஞ்சாயத்து நடக்கிறது. அப்போது ஆனந்தியிடம் கெஞ்சி கேட்கும் அவரது தாய், தயவு செய்து அன்பு தான் உன் கர்ப்பத்திற்கு காரணம் என சொல்லுமாறு கூறுகிறார். ஆனால் ஆனந்தி, அன்புவுக்கும் இதற்கும் எந்தவித சம்மந்தமும் இல்லை என திட்டவட்டமாக கூறிவிடுகிறார். தனக்கு இந்த அக்கிரமம் நடக்கும்போது அன்புவுக்கும் தனக்கும் எந்த பழக்கமும் இல்லை. இதனால் அவருக்கும் இதற்கும் துளி அளவு கூட சம்மந்தம் இல்லை என வெளிப்படையாக சொல்லிவிடுகிறார் ஆனந்தி.

44
ஆனந்தியின் கர்ப்பத்திற்கு மகேஷ் காரணமா?

ஆனந்தி தன்னுடைய கர்ப்பத்திற்கு அன்பு காரணமில்லை என்று தீர்க்கமாக சொன்னதை பஞ்சாயத்தார் ஏற்றுக்கொண்டனர். ஆனால் அதன்பின் சுயம்பு கேட்ட கேள்வியால் வாயடைத்து போகிறார் ஆனந்தி. அப்படி அவர் என்ன கேட்டார் தெரியுமா? அன்பு இல்லையென்றால் உன்னுடைய கர்ப்பத்திற்கு மகேஷ் தான் காரணம் என எடுத்துக் கொள்ளலாமா என கேட்டார். ஏனெனில் மகேஷும் ஆனந்தியை காதலித்து வந்தார். சுயம்புவின் இந்த வில்லங்கமான கேள்வியால் ஆனந்தி வாயடைத்துப் போகிறார். இதன் பின் என்ன ஆனது? ஆனந்திக்கு பஞ்சாயத்தில் என்ன தண்டனை கொடுக்கப்பட்டது? என்பது அடுத்த எபிசோடில் தெரியவரும்.

Read more Photos on
click me!

Recommended Stories