விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியல் மற்றும் சன் டிவியின் எதிர்நீச்சல் 2 ஆகிய சீரியல்களை ஓவர்டேக் செய்து டாப் 10 டிஆர்பி ரேஸில் மாஸ் காட்டி உள்ளது கயல் சீரியல்.
சின்னத்திரையில் எலியும் பூனையுமாக இருந்து வரும் சேனல்கள் என்றால் அது சன் டிவியும், விஜய் டிவியும் தான். இந்த இரண்டு சேனல்களுக்குமே மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. இதனால் யார் டாப்பு என்பதை நிரூபிக்க டிஆர்பி ரேஸில் இரண்டு சேனல்களும் செம டஃப் கொடுத்து வருகின்றன. இதில் சன் டிவி ஆதிக்கம் செலுத்தினாலும் அவ்வப்போது விஜய் டிவி அதற்கு டஃப் கொடுக்கும். அந்த வகையில் கடந்த வாரம் பின் தங்கி இருந்த சன் டிவியின் கயல் சீரியல் இந்த வாரம் விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியலை அடிச்சுதூக்கி முன்னேறி இருக்கிறது. இந்த வார டாப் 10 பட்டியலில் எந்தெந்த சீரியல்கள்? என்னென்ன இடத்தை பிடித்துள்ளன? என்பதை இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
25
பின்னுக்கு தள்ளப்பட்ட விஜய் டிவி சீரியல்கள்
விஜய் டிவியின் பிரைம் டைம் சீரியல்களான சின்ன மருமகள், பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 மற்றும் அய்யனார் துணை ஆகியவை தான் இந்த வார டாப் 10 சீரியல்கள் பட்டியலில் கடைசி மூன்று இடங்களை பிடித்துள்ளன. இதில் சின்ன மருமகள் சீரியல் கடந்த வாரத்தை போல் இந்த வாரமும் 10ம் இடத்தை தக்க வைத்துள்ளது. அதற்கு 6.65 டிஆர்பி ரேட்டிங் கிடைத்துள்ளது. கடந்த வாரம் 8-வது இடத்தில் இருந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் இந்த வாரம் 7.26 டிஆர்பி ரேட்டிங் உடன் 9-ம் இடத்துக்கு தள்ளப்பட்டு உள்ளது. கடந்த வாரம் 6-வது இடத்தில் இருந்த அய்யனார் துணை சீரியல், இந்த வாரம் 7.64 டிஆர்பி ரேட்டிங் உடன் 8-ம் இடத்துக்கு பின் தங்கி உள்ளது.
35
கடகடவென முன்னேறிய சன் டிவி சீரியல்கள்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மருமகள், அன்னம் போன்ற சீரியல்கள் கடந்த சில வாரங்களாக கடும் சரிவை சந்தித்து இருந்த நிலையில், இந்த வாரம் மீண்டும் கம்பேக் கொடுத்து டிஆர்பியிலும் கடகடவென முன்னேறி இருக்கின்றன. அதன்படி கடந்த வாரம் 9-ம் இடத்தில் இருந்த அன்னம் சீரியல் இந்த வாரம் விறுவிறுவென முன்னேறி 7-ம் இடத்தை பிடித்துள்ளது. இந்த சீரியலுக்கு 7.92 டிஆர்பி ரேட்டிங் கிடைத்துள்ளது. அதேபோல் கடந்த வாரம் 7ம் இடத்தில் இருந்த மருமகள் சீரியல் இந்த வாரம் ஒரு இடம் முன்னேறி 8.07 டிஆர்பி ரேட்டிங் உடன் 6-ம் இடத்தை பிடித்திருக்கிறது.
விஜய் டிவியின் நம்பர் 1 சீரியலான சிறகடிக்க ஆசை, கடந்த வாரம் சன் டிவியின் கயல் சீரியலையே ஓவர்டேக் செய்து நான்காம் இடத்தில் கெத்தாக இருந்தது. ஆனால் இந்த வாரம் மீண்டும் ஃபார்முக்கு வந்த கயல் சீரியல் கடகடவென முன்னேறி மீண்டும் 3ம் இடத்தில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கிறது. கடந்த வாரம் 4-ம் இடத்தில் இருந்த சிறகடிக்க ஆசை சீரியல், இந்த வாரம் ஒரு இடம் பின்னுக்கு தள்ளப்பட்டு 8.45 டிஆர்பி புள்ளிகளுடன் 5-ம் இடத்தில் உள்ளது.
55
டாப் 4 இடங்களை ஆக்கிரமித்த சன் டிவி சீரியல்கள்
வழக்கமாக டாப் 3 இடங்களை ஆக்கிரமிக்கும் சன் டிவி சீரியல்கள் இந்த வாரம் டாப் 4 இடங்களை தட்டிதூக்கி உள்ளது. இதில் நான்காம் இடத்தில் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் உள்ளது. அந்த சீரியலுக்கு 8.90 டிஆர்பி ரேட்டிங் கிடைத்துள்ளது. அடுத்ததாக மூன்றாவது இடத்தில் உள்ள கயல் சீரியலுக்கு 8.95 டிஆர்பி கிடைத்திருக்கிறது. முதல் இரண்டு இடங்களில் சிங்கப்பெண்ணே மற்றும் மூன்று முடிச்சு சீரியல்கள் உள்ளன. இதில் மூன்று முடிச்சு சீரியல் 9.88 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், சிங்கப்பெண்ணே சீரியல் 10.38 புள்ளிகள் உடன் முதலிடத்திலும் உள்ளன.