Bhanupriya: நடிகை பானுபிரியாவுக்கு என்ன ஆனது? உண்மைகளை போட்டு உடைத்த நடிகை குஷ்பூ.!

Published : Jun 06, 2026, 06:22 PM IST

Bhanupriya: 80-களில் கொடிகட்டிப் பறந்த நடிகைகள் எல்லோரும் ரீயூனியன் நிகழ்ச்சிகளில் சந்தித்துக்கொள்கிறார்கள். ஆனால், பானுபிரியா மட்டும் எந்த நிகழ்ச்சியிலும் கலந்துகொள்வதில்லை. அதற்கான காரணம் என்ன? என்பது குறித்து நடிகை குஷ்பு பேசியுள்ளார். 

PREV
16
Khusbhu About Actress Bhanupriya

80-90களில் தென்னிந்திய சினிமாவை பல நடிகைகள் ஆட்சி செய்தனர். அவர்களில் பானுபிரியாவும் ஒருவர். அழகு, நடிப்பு, அற்புதமான நடனம் என ரசிகர்களைக் கவர்ந்தார். நடிகர்களுக்கு இணையாக நடனமாடும் சில நடிகைகளில் பானுபிரியாவும் ஒருவர். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடப் படங்களிலும் நடித்து பிரபலமானார்.

இதையும் படியுங்கள்: Actor Jai: கோவிலில் எனக்கு நடந்த அவமானம்.! இஸ்லாம் மதத்திற்கு மாறியது குறித்து உண்மைகளை உடைத்த நடிகர் ஜெய்.!

26
முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தவர்

பானுபிரியா தனது கிளாசிக்கல் நடனத்தால் மிகவும் பிரபலமானார். பல படங்களில் அவரது நடனத்தைப் பார்த்து ரசிகர்கள் அசந்துபோனார்கள். குறிப்பாக, மீன் போன்ற அவரது கண்களுக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்தனர். படங்களில் அவரது கண்களை க்ளோசப்பில் காட்டுவதற்கென்றே தனி ஷாட்கள் இருக்கும்.

இதையும் படியுங்கள்: Karuppu Controversy: கருப்பு பட டைரக்டர் ஆர்.ஜே.பாலாஜியை வறுத்தெடுக்கும் சூர்யா ஃபேன்ஸ்.! இதுதான் காரணமா?

36
பானுபிரியா குறித்து பேசிய நடிகை குஷ்பூ

80-களின் நடிகைகள் ஒவ்வொரு வருடமும் 'ரீயூனியன்' என்ற பெயரில் சந்திக்கிறார்கள். ஆனால் பானுபிரியா மட்டும் இதில் கலந்துகொள்வதில்லை. அவரை அழைக்கவில்லையா? அல்லது அவரே வரவில்லையா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுவது வழக்கம். இந்த நிலையில் பானுப்பிரியா குறித்து சில உண்மைகளை நடிகை குஷ்பு வெளிப்படுத்தியுள்ளார்.

இதையும் படியுங்கள்: Savitri: இறப்பதற்கு முன் நடிகையர் திலகம் சாவித்திரி கூறிய கடைசி வார்த்தைகள்.! கண்ணீர் வரவைக்கும் இறுதி நிமிடங்கள்.!

46
அழைப்பு விடுத்தும் புறக்கணித்த பானுபிரியா

நடிகை குஷ்பு, 'நாங்கள் பானுபிரியாவை இரண்டு-மூன்று முறை ரீயூனியனுக்கு அழைத்தோம். ஆனால் அவர் வரவில்லை. அவர் யாருடனும் அவ்வளவு எளிதாக பழகமாட்டார். ஷூட்டிங்கில் கூட அவர் தனியாகத்தான் இருப்பார். சினிமாவில் பானுபிரியாவுக்கு நண்பர்கள் யார் என்று கேட்டால், யாரும் இல்லை என்றுதான் பதில் வரும். அவர் எப்போதும் எல்லோரிடமிருந்தும் விலகியே இருப்பார்' என்று கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள்: Roja Selvamani: எந்த ஹீரோவும் என்கிட்டே நெருங்க கூட இல்ல.! அதுக்கு காரணம் என்ன தெரியுமா? பல ஆண்டுகளுக்குப் உண்மைகளை போட்டு உடைத்த நடிகை ரோஜா.!

56
80s நடிகர்களின் ரியூனியன்

80-களின் இந்த ரீயூனியனில் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தித் திரையுலகைச் சேர்ந்த பல நட்சத்திரங்கள் உள்ளனர். ஆனால் மலையாளத்திலிருந்து மம்மூட்டி, தமிழிலிருந்து கமல்ஹாசன், தெலுங்கிலிருந்து பாலகிருஷ்ணா ஆகியோர் இந்தக் குழுவில் இல்லை. 'எங்க டீம்ல 36 பேர் இருக்காங்க, எல்லோரும் சேர்ந்து பிளான் பண்ணி நிகழ்ச்சிகளுக்குப் போவோம்' என்று குஷ்பு கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள்: பாட முடியாமல் கதறி அழுத S ஜானகி.! பாதியிலே ரெக்கார்டிங்கை நிறுத்திய இளையராஜா.! ஜானகியை அழ வைத்த வரிகள்.! எந்த பாட்டு தெரியுமா?

66
பானுபிரியா குறித்து இயக்குனர் ஒருவர் கூறியது

முன்பு ஒரு பேட்டியில், ஒரு இயக்குநர் பானுபிரியா பற்றிப் பேசினார். 'பானுபிரியா ரொம்ப நல்ல மனசுக்காரங்க. ஆனால் அம்மாவின் சுயநலம், கணவரின் பழக்கவழக்கங்கள் அவரது வாழ்க்கையை பாழாக்கியது. சொத்துக்களை அம்மா பெயரில் எழுதி வைத்துவிட்டு அமெரிக்கா சென்றார். அங்கே கணவரால் கஷ்டப்பட்டு, சென்னை திரும்பினார். அதன் பிறகு உடல்நலக்குறைவு அவரை பாதித்தது' என்று அந்த இயக்குநர் கூறியிருந்தார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories