தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் சுந்தர் சி. இவர் அருணாச்சலம், வின்னர், கலகலப்பு, அரண்மனை என பல்வேறு பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்துள்ள சுந்தர் சி, கடந்த 2000-ம் ஆண்டு நடிகை குஷ்புவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சுந்தர் சி தன் படத்தில் பணியாற்றிய ஹீரோயின்கள் குறித்து மனம்திறந்து பேசினார்.
முதலில் திரிஷா குறித்து அவர் பேசியதாவது, திரிஷா உடன் நிறைய படங்களில் ஒர்க் பண்ண வேண்டியது. ஆனால் மிஸ் ஆகிடுச்சு. கடைசியா அரண்மனை 2-வில் தான் அவருடன் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. திரிஷாவிடம் உள்ள நல்ல விஷயம் என்னவென்றால், அவரை மேலோட்டமாக பார்க்கும் போது ஈடுபாடு இல்லாத ஒரு நடிகையாக தெரிவார். ஆனால் மிகவும் திறமையான நடிகை என கூறினார்.
ஓவியா குறித்து கூறுகையில், “ஓவியா உடன் கலகலப்பு மற்றும் ஹலோ நான் பேய் பேசுறேன் ஆகிய படங்களில் பணியாற்றினேன். அவர் இந்த அளவுக்கு பிக்பாஸ் மூலம் பிரபலமடைவார் என நான் நினைக்கவில்லை. அவங்க ரொம்ப அமைதியானவங்க. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் அவருக்கு இருக்கும் இமேஜ் சர்ப்ரைஸாக உள்ளது. நான் பார்த்த ஓவியாவுக்கும், இதுக்கும் சம்பந்தமே இல்லை என கூறினார்.
நடிகை செளந்தர்யா குறித்து பேசுகையில், “நான் பணியாற்றியதிலேயே எனக்கு மிகவும் பிடித்த ஹீரோயின் செளந்தர்யா தான். ஒருவேளை குஷ்பு என் வாழ்க்கையில் வராமல் இருந்திருந்தால் கண்டிப்பா செளந்தர்யாவுக்கு புரபோஸ் பண்ணிருப்பேன். ரொம்ப நல்ல கேரக்டர். இப்படி ஒரு நல்ல பெண்ணை பார்ப்பது ரொம்ப அரிது. இவருடைய அண்ணன் அபர் இவங்கள விட்டு ஒரு செகண்ட் நகரமாட்டார். சாகும்போது கூட ரெண்டு பேரும் ஒன்னா செத்துபோயிட்டாங்க. ரொம்ப துரதிர்ஷ்டமான விஷயம்” என சுந்தர் சி பேசினார்.
இதையும் படியுங்கள்... உதயநிதி ஸ்டாலின் உடன் நேருக்கு நேர் மோதும் சிவகார்த்திகேயன்... பரபரப்பாகும் கோலிவுட்