90-களில் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரவீனா டண்டன். அங்கு பல்வேறு முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமான இவர் தமிழிலும் ஒரு சில படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக கமல்ஹாசன் நடிப்பில் 2002-ம் ஆண்டு வெளிவந்த ஆளவந்தான் படத்தில் ரவீனா டண்டன் தான் கதாநாயகியாக நடித்திருந்தார்.