தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் கலக்கி வந்த நடிகை கீர்த்தி சுரேஷ், தற்போது பாலிவுட்டில் ஹீரோயினாக எண்ட்ரி கொடுத்துள்ளார். இந்தியில் அவர் நடித்துள்ள முதல் படம் பேபி ஜான். இப்படத்தை அட்லீ தயாரித்துள்ளார். இப்படத்தில் பாலிவுட் நடிகர் வருண் தவானுக்கு ஜோடியாக நடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ். பேபி ஜான் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராக உள்ளது. வருகிற டிசம்பர் 25-ந் தேதி இப்படம் திரைக்கு வர உள்ளது.