அகதிகள் முகாம் டூ ஆஸ்கர்... ‘அம்மா நான் ஆஸ்கர் ஜெயிச்சிட்டேன்’னு சொல்லி அரங்கை அதிரவைத்த கே ஹூய் குவான்

First Published | Mar 13, 2023, 7:41 AM IST

எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ் (Everything Everywhere all at once) என்கிற திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய கே ஹூய் குவான் சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருதை வென்றார்.

உலகின் மிக உயரிய விருதாக கருதப்படுவது ஆஸ்கர். இவ்விருது விழா ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு 95-வது ஆஸ்கர் விருது விழா கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டால்பி தியேட்டரில் இவ்விருது விழா நடைபெற்று வருகிறது.

இதில் திரைத்துறையைச் சேர்ந்த நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்படும். இவ்விருதை பெறுவதை மிகப்பெரிய கவுரவமாகவே அவர்கள் கருதுகின்றனர். அந்த வகையில் இந்த ஆண்டு நடைபெற்று வரும் ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருதை வென்ற கே ஹூய் குவான் (Ke Huy Quan) பேசியது அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

இதையும் படியுங்கள்... Breaking : இந்திய குறும்படத்திற்கு ஆஸ்கர் விருது

Tap to resize

எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ் (Everything Everywhere all at once) என்கிற திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக அவருக்கு இவ்விருது வழங்கப்பட்டது. இவ்விருதை வென்றதும், அவர் அம்மா நான் ஆஸ்கர் விருதை வென்றுவிட்டேன் என உணர்ச்சி பொங்க தனது உரையை தொடங்கினார்.

இதையடுத்து தன்னுடைய பயணம் படகில் தொடங்கியதாக கூறிய அவர், அகதிகள் முகாமில் ஓராண்டைக் கழித்ததாகவும், இதைப்போன்ற கதைகள் திரைப்படங்களில் மட்டுமே நடக்கும் என அவர் கூறியதும் அரங்கமே கரகோஷம் எழுப்பி அவருக்காக ஆரவாரக் குரல் எழுப்பியது. பின்னர் தனது தாயாருக்கும், தனது காதல் மனைவிக்கும் நன்றி தெரிவித்து அவர் இந்த உரையை முடித்துக் கொண்டார்.

இந்த ஆண்டு அதிக பிரிவுகளில் நாமினேட் ஆன திரைப்படம் என்கிற பெருமையை எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ் திரைப்படம் பெற்றுள்ளது. ஆஸ்கர் வரலாற்றிலேயே முதன்முறையாக 11 பிரிவுகளில் இப்படம் நாமினேட் ஆகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... Oscars 2023 : வரலாறு படைத்தது தி எலபெண்ட் விஸ்பரர்ஸ்... இந்திய குறும்படத்துக்கு ஆஸ்கர்

Latest Videos

click me!