விஜய் படத்தை டைரக்ட் செய்த வடிவேலு... வைகைப்புயலுக்குள் இப்படி ஒரு திறமையா..! பலரும் அறிந்திடாத ஆச்சர்ய தகவல்

Published : Mar 12, 2023, 03:13 PM IST

தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வரும் வடிவேலு, காமெடி காட்சிகளை இயக்கியுள்ளதாக ஆச்சர்ய தகவல் வெளியாகி உள்ளது.

PREV
15
விஜய் படத்தை டைரக்ட் செய்த வடிவேலு... வைகைப்புயலுக்குள் இப்படி ஒரு திறமையா..! பலரும் அறிந்திடாத ஆச்சர்ய தகவல்

நகைச்சுவை நடிகர் வடிவேலு, அவருடன் நடிக்கும் சக நடிகர்களை வளரவிடமாட்டார் என்று தொடர்ந்து அவர்மீது ஏராளமானோர் குற்றச்சாட்டுகளை முன் வைத்து வந்தனர். கடந்த சில மாதங்களாக வடிவேலு குறித்து அவருடன் நடித்த சக நடிகர்களான முத்துக்காளை, மீசை ராஜேந்திரன், சிசர் மனோகர் என ஏராளமான நடிகர்கள் அடுக்கடுக்கான புகார்களை தெரிவித்து பேட்டி கொடுத்து வந்தனர். இவர்களது பேட்டி சமூக வலைதளங்களில் மிகவும் வைரல் ஆனது.

25

இந்நிலையில், தற்போது வடிவேலு உடன் ஏராளமான படங்களில் காமெடி காட்சிகளில் நடித்து பிரபலமான சங்கர் ஏழுமலை என்கிற கிங்காங் வடிவேலு குறித்து பல ஆச்சர்ய தகவல்களையும், அவர் செய்த உதவிகள் குறித்து பேட்டி ஒன்றில் மனம்விட்டு பேசி உள்ளார். குறிப்பாக வடிவேலுவுடன் சேர்ந்து சுறா, போக்கிரி போன்ற படங்களில் கிங்காங் நடித்த காமெடி காட்சிகள் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றன.

35

இந்நிலையில், அந்த பேட்டியில் பேசிய நடிகர் கிங்காங், “படங்களில் நடிக்கும்போது எப்படி நடித்தால் நன்றாக இருக்கும், நான் எப்படி டயலாக் பேசினால் அது ரசிகர்களை கவரும் என வடிவேலு டிப்ஸ் கொடுப்பார். அதிலும் போக்கிரி படத்தின் நான் நடித்த காமெடி காட்சிகள் இன்றளவும் பேசப்படுகிறது என்றால் அதில் வடிவேலுவின் பங்கும் அதிகளவில் இருப்பதாக நடிகர் கிங்காங் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்... ரிலீசுக்கு முன்பே ரூ.100 கோடியை நெருங்கிய வசூல்... ‘மாவீரன்’ சாட்டிலைட் உரிமையை தட்டிதூக்கியது யார் தெரியுமா?

45

பிரபுதேவா இயக்கத்தில் விஜய் நடித்த போக்கிரி படத்தில் வடிவேலுவுடன் கிங்காங் சேர்ந்து செய்யும் காமெடி கலாட்டாக்கள் ரசிகர்களை வயிறுகுலுங்க சிரிக்க வைத்தன. அதிலும் குறிப்பாக லாரி டிரைவராக வரும் கிங்காங் தண்ணீரை வீணடித்து செல்வதை கண்டித்து, அந்த தண்ணீரை அடைக்க முயலும் போது செய்யும் காமெடி அலப்பறைகளை யாராலும் மறந்திருக்க முடியாது.

55

அந்த சூப்பர் ஹிட் காமெடி சீனை இயக்கியதே வடிவேலு தானாம். பிரபுதேவாவிடம் பேசி அந்த மொத்த காட்சியையும் வடிவேலு தான் டைரக்ட் பண்ணினார் என கிங்காங் தெரிவித்துள்ளார். அவரின் முயற்சியால தான் அந்த காமெடி காட்சி வெற்றியடைந்ததாக அவர் கூறினார். இதைப்பார்த்த ரசிகர்கள் வடிவேலுவுக்கு இப்படி ஒரு திறமையா என ஆச்சர்யமடைந்துள்ளனர்.

இதையும் படியுங்கள்... 4-வது திருமணம் முடிந்த கையோடு... 44 வயது நடிகையுடன் ஹனிமூன் சென்ற 60 வயது நடிகர்...! வைரலாகும் போட்டோஸ்

Read more Photos on
click me!

Recommended Stories