இது ஒருபுறம் இருக்க, அவர் பகிர்ந்த திருமண வீடியோ படத்திற்காக எடுக்கப்பட்ட காட்சி என்றும் ஒரு தகவல் பரவி வருகிறது. ஆனால் இதற்கெல்லாம் நரேஷ் பாபுவும், பவித்ரா லோகேஷும் விளக்கம் அளிக்கவில்லை. இந்நிலையில், தற்போது எரிகிற நெருப்பில் எண்ணெய்யை ஊற்றும் விதமாக பவித்ராவும், நரேஷும் துபாயில் ஜோடியாக சுற்றும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. அவர்கள் இருவரும் ஹனிமூன் கொண்டாட்டத்திற்காக துபாய் சென்றுள்ளதாகவும், அப்போது எடுத்த புகைப்படங்கள் தான் இது என சோசியல் மீடியாவில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
இதையும் படியுங்கள்... பாலிவுட் நடிகை மாதுரி தீட்சித்தின் தாயார் மரணம் - ஆறுதல் கூறும் ரசிகர்கள்