இன்ஜினியரிங் பட்டதாரியான நடிகை ரம்யா பாண்டியன், நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தால் சினிமாவில் நடிக்கத் தொடங்கினார். இவர் முதன்முதலில் பாலாஜி சக்திவேல் இயக்க இருந்த ரா ரா ராஜசேகர் என்கிற திரைப்படத்தில் தான் நடிக்க கமிட் ஆகி இருந்தார். அப்படம் டிராப் ஆனதால், கடந்த 2015-ம் ஆண்டு வெளிவந்த டம்மி டப்பாசு என்கிற சிறு பட்ஜெட் படம் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக எண்ட்ரி கொடுத்தார் ரம்யா பாண்டியன்.