Lakme Fashion Week 2023:மின்னும் கத்தரிப்பூ நிற உடையில் இடுப்ப வளைச்சு, நெளிச்சு போஸ் கொடுத்த அதியா ஷெட்டி!

Published : Mar 12, 2023, 10:39 AM IST

பாலிவுட் நடிகை அதியா ஷெட்டி, ஃபேஷன் டிசைனர் நம்ரதா ஜோஷிபுரா வடிவமைத்த ஆடைகளை அணிந்து வந்து ராம்ப் வாக் செய்துள்ளார்.

PREV
110
Lakme Fashion Week 2023:மின்னும் கத்தரிப்பூ நிற உடையில் இடுப்ப வளைச்சு, நெளிச்சு போஸ் கொடுத்த அதியா ஷெட்டி!
லேக்மி ஃபேஷன் வீக் 2023

மிக பிரபலமான ஃபேஷன் நிகழ்ச்சிகளில் ஒன்று லேக்மி ஃபேஷன் வீக். ஒவ்வொரு ஆண்டும் லேக்மி ஃபேஷன் வீக் நிகழ்ச்சியில் ஒவ்வொரு ஆடை வடிவமைப்பாளர்களும் தங்களது ஆடை வடிவமைப்புகளை மாடல்கள் மற்றும் திரைப்பிரபலங்களுக்கு அணிய செய்வார்கள்.
 

210
லேக்மி ஃபேஷன் வீக் 2023

ஃபேஷன் டிசைனர் வடிவமைக்கும் ஆடைகளை அணிந்து கொண்டு பிரபலங்கள் பலரும் ராம்ப் வாக் செய்வார்கள். அப்படியொரு நிகழ்ச்சியைத் தான், லேக்மி ஃபேஷன் நிறுவனம் நடத்தி வருகிறது.

310
லேக்மி ஃபேஷன் வீக் 2023

ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் இந்த நிகழ்ச்சியின் இந்த ஆண்டுக்கான லேக்மி ஃபேஷன் வீக் 2023 கடந்த 9 ஆம் தேதி தொடங்கி நடந்து வருகிறது.
 

410
லேக்மி ஃபேஷன் வீக் 2023 - அதியா ஷெட்டி

இதில், பாலிவுட் பிரபலங்கள் பலரும் வித விதமான ஆடைகளில் வந்து கவர்ச்சியாகவும், செகஸியாகவும் வ்ந்து பார்வையாளர்களை கவர்ந்துள்ளனர். 

510
லேக்மி ஃபேஷன் வீக் 2023 - அதியா ஷெட்டி

இந்த லேக்மி ஃபேஷன் வீக் நிகழ்ச்சியில் ராஷ்மிகா மந்தனா, சோனாக்‌ஷி சின்ஹா, ஷோபிதா துலிபாலா, சுஷ்மிதா சென், டையானா பென்டி,  டாரா சுதாரியா, ஷில்பா ஷெட்டி, சன்யா மல்ஹோத்ரா என்று ஏராளமான பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டு பார்வையாளர்களை வெகுவாக அசத்தியுள்ளனர்.

610
ஃபேஷன் டிசைனர் நம்ரதா ஜோஷிபுரா

அந்த வகையில், அண்மையில் திருமணம் செய்து கொண்ட இந்திய கிரிக்கெட் வீரர் கேஎல் ராகுலின் மனைவியும், பாலிவுட் நடிகையுமான அதியா ஷெட்டி பிரபல ஆடை வடிவமைப்பாளரான நம்ரதா ஜோஷிபுராவின் கை வண்ணத்தில் வடிவமைக்கப்பட்ட ஆடையை அணிந்து கொண்டு ஒய்யாரமாக ராம்ப் வாக் செய்துள்ளார். அவரது உடல் வடிவமைப்புக்கும், உயரத்திற்கும் ஏற்ப ஆடைகளை கச்சிதமாக வடிவமைத்துக் கொடுத்துள்ளார்.

710
ஃபேஷன் டிசைனர் நம்ரதா ஜோஷிபுரா

பிகாம் பிரிவில் பட்டம் பெற்றுள்ள நம்ரதா ஜோஷிபுரா, தனது கல்லூரி வாழ்க்கையில் ராஜேஷ் பிரதாப், மணிஷா அரோரா, பயல் பிரதாப் என்று எண்ணற்ற ஆடை வடிவமைப்பாளர்களை கண்டுள்ளார். இவர்கள் எல்லோரும், உலகெங்கிலும் வெற்றிகரமான ஆடை வடிவமைப்பாளர்களாக திகழ்கின்றனர்.
 

810
ஃபேஷன் டிசைனர் நம்ரதா ஜோஷிபுரா

மூத்த ஆடை வடிவமைப்பாளரான சுனீத் வர்மா உடன் இணைந்து 2 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். இதையடுத்து சொந்த பெயரிடப்பட்ட லேபிளைத் தொடங்கியுள்ளார்.
 

910
ஃபேஷன் டிசைனர் நம்ரதா ஜோஷிபுரா

திருமணத்திற்குப் பிறகு நியூயார்க் சென்ற நம்ரதா, கடந்த 2004 ஆம் ஆண்டில் முதல் ஃபேஷன் ஷோ நிகழ்ச்சிக்கு வந்தார். இது, 2 டிசைனர் கொண்ட ஃபேஷன் ஷோ நிகழ்ச்சி. அதில் ஒருவர் தான் சப்யாசாச்சி முகர்ஜி. 

1010
அதியா ஷெட்டி - ஃபேஷன் டிசைனர் நம்ரதா ஜோஷிபுரா

தனது வடிவமைப்பு அழகியலை நவீனத்தை கொண்டாடுவதில் முழு கவனம் செலுத்தினார். மார்க் ஜாகோப்ஸ், டிரைஸ் வென் நோட்டன், பாரிசியன் லேபிள் 'வீட்மெண்ட்ஸ் ஆகியோர் தான் சர்வதேச ஆடை வடிவைமைப்பாளர். இவர்கள் தான் ஜோஷிபுராவுக்கு மிகவும் பிடித்தமான ஆடை வடிவமைப்பாளர்கள். ஆப்ரகாம் மற்றும் தாக்கூர் ஆகிய இந்திய ஆடை வடிவமைப்பாளர்கள் நம்ரதாவுக்கு மிகவும் பிடித்தமான ஆடை வடிவமைப்பாளர்கள்.
 

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
click me!

Recommended Stories